பாஜகவிற்கு வாக்களித்த திமுக கூட்டணி கவுன்சிலர்கள்..!

இன்று மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணை தலைவர் பேரூராட்சி தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாகர்கோவில் மாநகராட்சியில் மொத்தம் 52 வார்டுகள் உள்ளனர். அதில் திமுக 24, காங்கிரஸ் 7 , மதிமுக 1 என மொத்தமாக 32 திமுக கூட்டணி கவுன்சிலர்கள் உள்ளனர். அதேநேரத்தில் பாஜக 11, அதிமுக 7 , சுயேச்சை 2 என பாஜக பக்கம் 20 கவுன்சிலர்கள் உள்ளனர்.
இன்று நடைபெற்ற மறைமுக தேர்தலில் திமுக வேட்பாளர் மகேஷ் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், பாஜகவிற்கு 24 ஓட்டுகள் கிடைத்துள்ளன. இதனால், பாஜகவிற்கு திமுக கூட்டணி கவுன்சிலர்கள் 4 பேர் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025