எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம்…!

பல்வேறு குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு இருந்த ஒருவர் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதால், அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. குற்றவாளியின் மருத்துவ அறிக்கையை நீதிபதிகள் பார்த்துள்ளனர். அதில், அவருக்கு கடுமையான மூச்சுத்திணறல் இருப்பதாகவும், அவரால் ஒருவரின் ஆதரவின்றி நடக்க முடியாது எனவும், அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவருக்கு மீண்டும், மீண்டும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல கிரிமினல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு இருந்தாலும், அவருக்கு தற்போது உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025