நடராஜன் மைதானத்தை திறந்து வைக்கும் தினேஷ் கார்த்திக்.!!

natarajan and dinesh karthik

இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தன்னுடைய சொந்த ஊரான சேலம் அருகே உள்ள சின்னப்பம் பட்டியில் கிரிக்கெட் மைதானம் ஒன்றை சொந்தமாக கட்டியுள்ளார். இந்த மைதானத்தை திறக்கும் திறப்பு விழா வரும் ஜூன் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த திறப்பு விழாவிற்கு தினேஷ் கார்த்திக், அசோக் சிக்மானி, ஷ. ஆர்.ஆர். பழனி, கே.எஸ். விஸ்வநாதன், ஆர்.எஸ். ராமசாமி, யோகி பாபு உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளனர். இந்நிலையில், இந்த விழாவில் கலந்துகொள்ளும் தினேஷ் கார்த்திக் மற்றும் தமிழக கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி இருவரும் தான் இந்த மைதானத்தை திறந்து வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், நடராஜன் கட்டியுள்ள இந்த மைதானத்தில் 4 பிட்சுகள், இரண்டு பயிற்சி தடங்கள், ஜிம்,கேண்டீன் மற்றும் போட்டியை காண 100 பேர் பார்க்க கூடிய வகையில், இடமும் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்