மியான்மர், தாய்லாந்தை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 150 ஆக உயர்வு.!

மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

myanmar earthquake

பாங்காக் : மியான்மர் நாட்டில் இன்று மதியம் வேளையில், 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 6.4 ரிக்டர் அளவிலான அதிர்வுகள் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் மியான்மரின் ஐந்து நகரங்களில் உள்ள கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து மியான்மர் இன்னும் மீளவில்லை, கட்டட இடிபாடுகளில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. தற்போது, காட்டங்கள் இடிபாடுகளில் சிக்கிய பலர் மாயமானதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் அச்சம் உள்ளது. அதே நேரத்தில், மீட்புப் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 150க்கும் மேற்பட்டோர் பேர் பலியானதாகவும், 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, மீட்பு பணி தீவிரமாக நடைபெற்ற வரும் நிலையில், மியான்மர் இராணுவ அரசாங்கத்தின் தலைவரான சீனியர் ஜெனரல் மின் ஆங் ஹ்லைங், “இறப்பு எண்ணிக்கை மற்றும் காயங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனது நாட்டில் குறைந்தது 144 பேர் கொல்லப்பட்டதாகவும், 730 பேர் காயமடைந்ததாகவும் தொலைக்காட்சியில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

தாய்லாந்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பாங்காக் நகர அதிகாரிகள், உயரமான கட்டிடம் உட்பட மூன்று கட்டுமான தளங்களின் இடிபாடுகளில் இருந்து 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 16 பேர் காயமடைந்தனர் மற்றும் 101 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்