17 வருட பகையை தீர்த்து கொண்ட ஆர்சிபி… சேப்பாக்கத்தில் சிஎஸ்கே படுதோல்வி.!
பெங்களூரு அணிக்கு எதிரான பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி 50 ரன் வித்தியாசத்தில் படு தோல்வி அடைந்துள்ளது.

சென்னை : ஐபிஎல் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான 8-வது போட்டி சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு தொடங்கிய இப்போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்றது.
முதலில் டாஸ் வென்று சிஎஸ்கே அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்தது. ஆர்சிபி அணியில், கேப்டன் பட்டிதார் அரைசதம் அடித்தார். பிலிப் சால்ட் (32), கோலி (31) உள்ளிட்டோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிஎஸ்கே தரப்பில் நூர் முகமது 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இறுதியில், பெங்களூரு அணி, 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களை குவித்து, சென்னை அணிக்கு 197 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
பின்னர், 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணி, பவர்பிளேவில் வெறும் 30 ரன்களை எடுத்து 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதன்படி, தீபக் ஹூடா அவுட் 9 பந்துகளில் 4 ரன்னும், சாம் கரன் 13 பந்துகளில் அவுட் வெறும் 8 ரன்னும் எடுத்து அவுட்கினார்கள். சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகினார்.
தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர் திரிபாதி (5), ஹூடா (4), சாம் கரன் (8) ஆகியோர் வந்த வேகத்தில் நடையைக் கட்டினர். மேலும், 11 ரன்களில் ஆட்டமிழந்தார் அஸ்வின். இதையடுத்து களமிறங்கிய எம்எஸ் தோனி, க்ருணால் பாண்டியாவின் கடைசி ஓவரில் 2 சிக்ஸர்கள் அடித்து மொத்தம் 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார்.
ஆர்சிபி அணி சார்பாக, வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் ஒரு ஓவரில் ராகுல் திரிபாதி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரை விக்கெட் செய்து அசத்தினார். இறுதியில், சென்னை அணி, 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களைப் எடுத்து, 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்விடைந்தது.
17 ஆண்டு சோகத்துக்கு விடிவு காலம்
ஐபிஎல் வரலாற்றில் சென்னை சேப்பாக்கத்தில் 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஆர்சிபி அணி, ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த நிலையில், இன்றைய பயங்கர ஆட்டத்தின் மூலம் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. கடந்த 2008-ஆம் ஆண்டுக்கு பிறகு, ஆர்சிபி தொடர் தோல்விகளையே சந்தித்து வந்த நிலையில், 17 ஆண்டுகளாக தொடர்ந்த சோகத்துக்கு இன்றைய போட்டியில் விடிவு கிடைத்ததும் ஆர்சிபி ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகிறார்கள்.