பரபரப்பாக மேட்ச்.., சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற டெல்லி.!

விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடந்த இன்று நடந்த டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி டிராவில் முடிந்ததால் சூப்பர் ஓவருக்கு சென்றது.

DC vs RR

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த டெல்லி 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. 189 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்து சமன் செய்ததால் சூப்பர் ஓவருக்கு சென்றது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ​​டெல்லி அணி சார்பாக, அபிஷேக் போரெல் 37 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து சிறப்பாக செயல்பட்டார்.

கேப்டன் அக்சர் படேல் 14 பந்துகளில் 34 ரன்களும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 18 பந்துகளில் 34 ரன்களும் எடுத்தனர்.  மேலும், அசுதோஷ் 15 ரன்களும், ஸ்டப்ஸ் 34 ரன்கள் எடுத்திருந்தனர். இறுதியில், 20 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் குவித்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 189 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பின்னர், 189 என்ற இலக்கை நோக்கி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக வெளியேறியிருக்கிறார்.

ஆரம்பத்தில் இருந்து ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சனின் பார்ட்னர் ஷிப் அணிக்கு சத்தமாகவே அமைந்ததது இவர்கள் இருவரும் இணைந்து 82 ரன்களை குவித்தனர். இருப்பினும், அவர் 31 ரன்கள் எடுத்திருந்த போது, போட்டியின் 5.3ஆவது பந்தில் காயம் ஏற்பட்டது. விப்ராஜ் வீசிய அந்த பந்து ஃபுல்டாஸாக வந்ததால், அதனை ஓங்கி அடித்தபோது சாம்சனுக்கு வலி ஏற்பட்டு வெளியேறினார்.

இதனை தொடர்ந்து, 37 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து வெளியேறிய யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் விக்கெட்டை குல்தீப் யாதவ் வீழ்த்தினார். அரைசதம் அடித்து அசத்திய அவர், மொத்தம் 51 ரன்கள் எடுத்த பிறகு 14வது ஓவரின் இரண்டாவது பந்தில் அவர் அவுட்டாகினார்.

இதையடுத்து, நிதிஷ் ராணா 28 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மிட்செல் ஸ்டார்க் ஒரு முக்கிய விக்கெட்டை வீழ்த்தினார். விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சாதகமாகும் நேரத்தில், இறுதி ஓவர் வரை இழுத்த இப்போட்டியில், கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. ஸ்டார்க் வீசிய கடைசி பந்தில் ஜுரேலால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.

சூப்பர் ஓவர்

189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை சேஸ் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இறுதி ஓவர் வரை இழுத்த அடித்த நேரத்தில்,  கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. ஸ்டார்க் வீசிய கடைசி பந்தில் ஜுரேலால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. கடைசி ஓவரில் 8 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து போட்டியை சூப்பர் ஓவருக்கு அழைத்துச் சென்றார் டெல்லி கேபிட்டல்ஸ் வீரர் மிட்செல் ஸ்டார்க்.

திரில் வெற்றி

சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக, ஹெட்மேயர் செய்த மிகப்பெரிய தவறு காரணமாக, அடுத்தடுத்து ரன் அவுட் ஆகி, 0.5 ஓவரில் 11 ரன்களுக்கு 2 விக்கெட்டை பறிகொடுத்தது. இதன்படி, டெல்லிக்கு 12 ரன்கள் இலக்கு வைக்கப்பட்டது. பின்னர், களமிறங்கிய டெல்லி அணி இந்த இலக்கை எளிதில் எட்டி பிடித்து த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்