+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் (+2 ரிசல்ட்) தற்போது வெளியாகி உள்ளன. இதனை அரசு குறிப்பிட்ட இணையதளங்கள் வாயிலாகவும், பள்ளி வளாகங்களுக்கு நேரில் சென்றும் தெரிந்து கொள்ளலாம்.

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன. சுமார் 7.80 லட்சம் மாணவ மாணவியர்கள் இப்பொதுத் தேர்வை எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் நாளை (மே 9) வெளியாகும் முன்னர் குறிப்பிட்டு இருந்த நிலையில் இன்று (மே 8) வெளியாகும் என சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது.
அதேபோல, தற்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழ்நாடு +2 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகள் மாணவர்களின் மொபைல் எண்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாகவும் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும், அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரபூர்வ இணையதளங்கள்
மேற்கண்ட இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் தேர்வுஎண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்கள் +2 மதிப்பெண்களை அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிக்கு நேரடியாக சென்றும், ரில்சட் அறியலாம். காலை 10 மணி அளவில் மாணவர்களின் மதிப்பெண்கள் அடங்கிய பட்டியல் அவரவர்களின் பள்ளிகளில் ஒட்டப்பட்டு இருக்கும்.