பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!
பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக எல்லைக்கோட்டில் நமது ராணுவ வீரர்கள் சண்டையிட்ட வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு – காஷ்மீர் மற்றும் பஞ்சாபில் பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்திய இராணுவம் ஆபரேஷன் சிந்தூர்-ஐத் தொடங்கியது. ஜம்மு காஷ்மீர் முதல் குஜராத் வரையிலான 26 இடங்களில் பாகிஸ்தான் தொடர்ச்சியாக இரண்டாவது இரவும் தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது.
எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகிலுள்ள பயங்கரவாத ஏவுதளங்களை அழித்தது. இது தொடர்பான வீடியோவை பொது தகவல் இயக்குநரகம் (ADG PI), ”ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாபில் உள்ள பல நகரங்களில் பாகிஸ்தான் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்த முயற்சித்ததற்கு பதிலளிக்கும் விதமாக, மே 8 மற்றும் மே 9 ஆகிய தேதிகளில் இரவு நேரத்தில், கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் உள்ள பயங்கரவாத ஏவுதளங்களை தகர்த்ததாக குறிப்பிட்டுள்ளது.
மேலும் அதில், ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களின் முக்கிய நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் தூள் தூளாக்கப்பட்டதாக உணர்ச்சி பொங்க கூறியுள்ளது. தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான நம் வீரர்களின் துணிச்சல் மிக்க செயல்பாடுகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
OPERATION SINDOOR
Indian Army Pulverizes Terrorist Launchpads
As a response to Pakistan’s misadventures of attempted drone strikes on the night of 08 and 09 May 2025 in multiple cities of Jammu & Kashmir and Punjab, the #Indian Army conducted a coordinated fire assault on… pic.twitter.com/2i5xa3K7uk
— ADG PI – INDIAN ARMY (@adgpi) May 10, 2025
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025