கொரோனா கட்டுக்குள் இருக்கு…மக்கள் பயப்படவேண்டாம்! மத்திய அரசு விளக்கம்!
நாடு முழுவதும் 257 பேர் மட்டுமே கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால் அந்த சமயம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகு ஒரு வழியாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த சூழலில், இப்போது மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால் மீண்டும் அச்சம் எழுந்துள்ளது. இதுவரை 257 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதைப்போல, நேற்று கொரோனா பாதிப்பால் 2 பேர் உயிரிழந்ததாகவும் செய்திகள் வெளியான நிலையில் மீண்டும் கொரோனாவா? என மக்கள் அச்சப்பட தொடங்கிவிட்டார்கள். இந்த சூழலில், மக்களுக்கு சற்று நிம்மதி அளிக்கும் விதமாக மத்திய அரசு மக்கள் அச்சப்பட தேவையில்லை கொரோனா தற்போது கட்டுக்குள் உள்ளது என விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவலின் படி, இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் மற்றும் பிற தடுப்பூசிகள் பரவலாக வழங்கப்பட்டு, பெரும்பாலான மக்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர். தொற்று பரவல் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டால் உடனடியாக செயல்படுத்துவதற்கு தேவையான மருத்துவ உள்கட்டமைப்பு, ஆக்ஸிஜன் வசதிகள், தீவிர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் மருந்து இருப்பு ஆகியவை உறுதி செய்யப்பட்டுள்ளன.
திய வகை வைரஸ்களை (Variants) கண்டறியவும், அவற்றின் பரவலைத் தடுக்கவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) உள்ளிட்ட ஆய்வு நிறுவனங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன. எனவே, கொரோனா பரவல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. தற்போதைய சூழலை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைப்போல, தரவு பகுப்பாய்வாளர், விஜயானந்த் சொன்ன தகவலின் படி, புதிய கொரோனா அலை எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை. சிங்கப்பூர், ஹாங்காங்கில் கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும், அவை கொரோனா அலையாக மாறுமா என்பதை தற்போது கூற முடியாது” எனவும் கூறியிருக்கிறார்.