‘கணவரை பிரிய 3-வது நபரே காரணம்’ – ஆர்த்தி பளிச்.! அப்படி என்ன சொன்னார்.?
வீட்டைவிட்டு ஜெயம் ரவி வெளியே சென்றது திட்டமிட்ட சதி என்று குறிப்பிட்டு ரவி மோகன் அறிக்கைக்கு ஆர்த்தி மீண்டும் பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னை : ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவியின் விவாகரத்து விவகாரம் ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் சர்ச்சைக்குரியதாகி வருகின்றன. தனது மனைவி கட்டுப்படுத்துவதாகவும், முதுகில் குத்தப்பட்டதாகவும் நடிகர் ரவி சமீபத்தில் கூறியதைத் தொடர்ந்து, நடிகர் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி ரவி மற்றுமொரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தற்போது ஆர்த்தி ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில், 3-வது நபரால் தான் தங்களது திருமண வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், கணவரை கட்டுப்படுத்தும் மனைவி என தன் மீது தவறான முத்திரை குத்தப்பட்டுள்ளதாகவும், குடும்பத்தில் பிரச்னை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான பழக்கங்களில் இருந்து கணவரை பாதுகாக்கவே அவரை கட்டுப்படுத்தினேன் என்றும் ஆர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
ஆர்த்தி ரவி வெளியிட்ட மூன்று பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையில்,”உங்கள் வாழ்வின் ஒளி என அறியப்படும் அவர், நம் வாழ்வில் இருளைக் கொண்டு வந்துள்ளார். என் கணவருக்கு நிம்மதி கிடைக்கவே நான் விரும்புகிறேன். ஆனால் அந்த நிம்மதி, எல்லா கடினமான நேரத்திலும் துணை நின்ற ஒருவரைக் கொச்சைப்படுத்துவதன் மூலம் கிடைக்காது.
இத்தனை வருடங்கள் உங்களுக்காக உங்களோடு வாழ்ந்த ஒருத்தியை உதறித்தள்ள வேண்டும் என முடிவு எடுத்த நீங்கள், அதை கொஞ்சம் கண்ணியத்துடன் கையாண்டு இருக்கலாம். உண்மை தெரிந்த ஒரே நபர், என் கணவர். ஆனால் அவரே எனக்காக நின்று பேச மறுக்கிறார்.
தனது சொத்துகளை, கௌரவத்தை இழந்து வெறும் காலோடு அவர் ஒன்றும் வீட்டை விட்டு வெளியேறிப் போகவில்லை. மிகத் தெளிவாகத் திட்டமிட்டு விலையுயர்ந்த ஆடைகள், காலணிகள் அணிந்து, தனக்கு தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொண்டு ரூ.5 கோடி மதிப்புள்ள Range Rover காரில் தான் வீட்டை விட்டுச் சென்றார்” என்று விரிவாக குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram