PBKS vs DC: ஆறுதல் வெற்றியுடன் தொடரை முடிக்குமா டெல்லி.? இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியுடன் மோதல்.!

கடந்த மே 8-ம் தேதி தரம்ஷாலாவில் பாதியில் கைவிடப்பட்ட பஞ்சாப் vs டெல்லி போட்டி, இன்று மீண்டும் நடக்க இருக்கிறது.

Punjab Kings vs Delhi Capitals

ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றது. இந்த போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சாவை மான் சிங் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. பஞ்சாப் கிங்ஸ் அணி ஏற்கனவே ஐபிஎல் பிளே ஆஃப்களுக்கு முன்னேறிவிட்டது.

நேற்றைய தினம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டிக்குப் பிறகு, பஞ்சாப் அணி ஐபிஎல் 2025 புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் பஞ்சாப் அணி, புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களில் நீடிக்கவே விரும்பும்.

அதே நேரத்தில் கடந்த போட்டியில் மும்பை அணியிடம் தோல்வியடைந்து, தொடரில் இருந்து இன்றியை போட்டியுடன் வெளியேறவிருக்கும் டெல்லி, வெற்றியுடன் தொடரை முடிக்கும் முனைப்பில் இருக்கும். தற்போது, ​​பஞ்சாப் கிங்ஸ் அணி 12 போட்டிகளுக்குப் பிறகு 17 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

ஐபிஎல்லில் இதுவரை பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையே மொத்தம் 33 போட்டிகள் நடந்துள்ளன, அவற்றில் பஞ்சாப் கிங்ஸ் 17 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, டெல்லி கேபிடல்ஸ் 16 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், இந்தப் போட்டியில் இரு அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டியை எதிர்பார்க்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்