அஜித் சம்பவம் போல் மற்றொரு அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்.., இளைஞரை சரமாரியாக தாக்கிய போலீசார்.!
தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் காவல்நிலையத்தில் இளைஞர் ஒருவரை காவலர்கள் தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

தேனி : சிவகங்கை இளைஞர் அஜித்குமாரை போலீசார் அடித்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் நிலையில், அதேபோல் மற்றொரு அதிர வைக்கும் சம்பவம் நடந்துள்ளது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் 14.1.2025 அன்று பட்டியலின இளைஞரை போலீசார் சரமாரியாக தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல் ஆய்வாளர் அபுதுல்லா, சிறப்பு சார்பு ஆய்வாளர் சுயசம்பு ஆகியோர் இளைஞரை தாக்கியதாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் புகார் எழுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் மீண்டும் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத் உத்தரவின் பேரில். காவல் ஆய்வாளர் அபுதல்ஹா, காவலர்கள் மாரிச்சாமி, பாண்டி உள்ளிட்ட ஐந்து பேர் தேனி ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் காவல்நிலையத்தில் இளைஞர் ஒருவரை காவலர்கள் தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. காவல் ஆய்வாளர் அபுதுல்லா, சிறப்பு சார்பு ஆய்வாளர் சுயசம்பு ஆகியோர் இளைஞரை தாக்கியதாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் புகார் எழுப்பப்பட்டுள்ளது. pic.twitter.com/KhNjx5rcnH
— kishore k swamy 🇮🇳 (@sansbarrier) July 2, 2025
கடந்த ஜனவரி 14 அன்று, மதுபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக ரமேஷ் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு, அவர் காவலர்களுடன் ஆபாசமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது, இதனால் காவல் ஆய்வாளர் அபுதல்ஹா, சிறப்பு உதவி ஆய்வாளர் சுயசம்பு உள்ளிட்ட காவலர்கள் அவரை லத்தி மற்றும் கால்களால் தாக்கியதாக தெரிகிறது.
காவல் நிலையங்களில் இத்தகைய தாக்குதல்கள் மீண்டும் மீண்டும் நிகழ்வது குறித்து பொதுமக்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன, மேலும் உரிய விசாரணை மற்றும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.