”புதிய கட்சி தொடங்கிய ஈலோன் மஸ்க்” – டிரம்ப் என்ன சொன்னார் தெரியுமா?

இது ஒரு முட்டாள்தனமான நடவடிக்கை என்றும், அமெரிக்காவின் இரு கட்சி அரசியல் அமைப்பில் மூன்றாம் தரப்பு குழப்பத்தை மட்டுமே உருவாக்கும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

trump vs musk

வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர்  எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ”அமெரிக்கா பார்ட்டி” என்ற புதிய அரசியல் கட்சியை  தொடங்கியதாக அறிவித்ததற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது பேசிய அதிபர் டிரம்ப், ​​”குடியரசுக் கட்சியுடன் நாங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளோம் என்று கூறினார். அமெரிக்காவில் இரு கட்சி முறைதான் இருந்து வருகிறது, 3வது கட்சியை தொடங்குவது குழப்பத்தை அதிகரிக்கும். கட்சி தொடங்குவது எலான் மஸ்கிற்கு வேடிக்கையாக இருக்கலாம், ஆனால் அது அபத்தமானது. மேலும், இந்த நடவடிக்கை எனக்கு ஒரு துரோகம் போல் தெரிகிறது” என்றார்.

வருகின்ற 2026 தேர்தல்கள் குறித்த உற்சாகம் அமெரிக்காவில் அதிகரித்து வரும் நேரத்தில், நாட்டின் அரசியலில் துருவமுனைப்பு அதிகரித்து வரும் நேரத்தில், எலோன் மஸ்க்கின் புதிய கட்சியை தொடங்கியதாக அறிவிப்பு வந்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

முன்னதாக டிரம்ப் இந்த முயற்சியை “அபத்தமானது” என விமர்சித்து, அமெரிக்காவில் மூன்றாவது கட்சி வெற்றிபெறாது என்றும் மஸ்க் தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர் என்பதால், அமெரிக்க சட்டப்படி அவரால் அதிபராக முடியாது என்றும் தனது விமர்சனங்களை முன் வைத்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்