சரோஜா தேவி மறைவு – கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இரங்கல்!

பழம்பெரும் நடிகை சரோஜாதேவியின் மறைவுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இரங்கல் தெரிவித்துள்ளார்.

saroja devi - siddaramaiah

கர்நாடகா : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். அவருக்கு வயது 87. “அபிநய சரஸ்வதி” என்று அழைக்கப்படும் பி சரோஜா தேவி 1955 ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான மகாகவி காளிதாசா மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். சரோஜா தேவி 1969 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும், 1992 ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதையும் பெற்றார்.

தற்பொழுது, மறைந்த நடிகை சரோஜா தேவியின் உடல் மல்லேஸ்வரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சினிமா, அரசியல் பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், அவருக்கு இபிஎஸ், பிரேமலதா விஜயகாந்த், செல்வப்பெருந்தகை, எல்.முருகன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது மறைவு சினிமாவிற்கு பேரிழப்பு என்றும், ஜெயலலிதாவின் பேரன்பைப் பெற்றவர் என்றும் நினைவுகூர்ந்துள்ளனர்.

இப்பொழுது, கரந்தகா முதல்வர் சித்தராமையா தனது எக்ஸ் பக்கத்தில், “மூத்த கன்னட நடிகை பி. சரோஜா தேவியின் மறைவுச் செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. அபிநய சரஸ்வதி (நடிப்பு தெய்வம்) என்று அழைக்கப்படும் இவர், கன்னடம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் கிட்டத்தட்ட 200 படங்களில் நடித்துள்ளார்.

சரோஜா தேவியின் பெயர் குறிப்பிடுவது கிட்டூர் சென்னம்மா, பாப்ருவாஹனா மற்றும் அன்ன தாங்கி போன்ற படங்களில் அவரது அழகான நடிப்பை நினைவுபடுத்துகிறது. நேர்த்தியான ரசனை கொண்ட படங்கள் மூலம், பல தசாப்தங்களாக சினிமா ரசிகர்களை மகிழ்வித்தார். அவரது மறைவு இந்திய சினிமாவுக்கு மிகப்பெரிய இழப்பாகும். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். துயரத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது இரங்கல்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்