“தமிழ்நாட்டின் ஒருமித்த குரலை நாடாளுமன்றத்தில் எடுத்து வைக்க வேண்டும்” – மு.க.ஸ்டாலின் அறிவுரை.!
தமிழ்நாட்டின் குரலை மழைக்கால கூட்டத்தொடரில் எடுத்து வைக்க வேண்டும் திமுக எம்.பிக்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் கூட்ட அரங்கில் திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
இந்தக் கூட்டம் காலை 10:30 மணியளவில் தொடங்கியது. வருகின்ற ஜூலை 21-ம் தேதி அன்று தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடருக்கு முன்னதாக இந்த ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கடந்த 11 ஆண்டுகளாக தமிழ்நாட்டை புறக்கணித்து வரும் ஒன்றிய பாஜக அரசின் அணுகுமுறையை எதிர்த்து, தமிழ்நாட்டின் கல்வி மற்றும் நிதி உரிமைகளை நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், ரயில் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு, கீழடி ஆய்வறிக்கை, வாக்காளர் பட்டியல் திருத்தம், ஆப்ரேஷன் சிந்தூர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவது குறித்து விவாதிக்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீருக்கு மாநிலத் தகுதி கொடுக்காமல் தட்டிக்கழிப்பது. வாக்காளர் சீர்திருத்தம் என்ற பெயரில் பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் கோடிக்கணக்கானவர்களின் வாக்குரிமையைப் பறித்து தேர்தல் ஆணையத்தை தன்னாட்சிப்படுத்துவது. தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை அரசால் தொடர்ந்து கைது செய்யப்படுவது, கச்சத்தீவு மீட்பு. கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவது. திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிப்பது.
மாநிலத்தின் நிதி தன்னாட்சிக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் தமிழ்நாட்டிற்கான நிதியுரிமையைப் பறிப்பது எனத் தமிழ்நாடு தொடர்ச்சியாக வஞ்சிக்கப்படுவதைக் கண்டித்து, நாடாளுமன்றத்தில் நமக்கான உரிமைக்குரலை ஓங்கி ஒலிப்போம்.
தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநிலங்களின் தாய்மொழிகளைப் புறக்கணித்து இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிப்பது. ஏழை – எளிய மக்களைப் பாதிக்கும் இரயில் கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை தி.மு.க சார்பில் நாடாளுமன்றத்தில் எடுத்துரைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ”நிதி, மொழி, கல்வி, கூட்டாட்சி உரிமைகளைப் பாதுகாக்கும் குரலாக ஒலிக்க வேண்டும். மத்திய பாஜக அரசின் 11 ஆண்டுகள் என்பது, மக்களின் உரிமைகளை நசுக்குவது, மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பது, இந்தி, சமஸ்கிருதத்தைத் திணிப்பது, மதவாதத்தை வளர்ப்பது, தமிழ்நாட்டை வஞ்சிப்பது என National Dictatorship Arrangement ஆட்சியை நடத்தி வருவதற்குத் தடையாக திமுக எம்பிக்களின் குரல் இருக்கும்.
மக்களாட்சியின் குரலாக ஒலிக்கும் நமது திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், நடைபெறவுள்ள குளிர்கால கூட்டத்தொடரில் இந்திய மக்களின் உள்ளுணர்வுகளையும் தமிழ்நாட்டின் ஒருமித்த குரலையும் எடுத்து வைத்து, நிதியுரிமை – மொழியுரிமை – கல்வியுரிமை கூட்டாட்சி உரிமை ஆகியவற்றைப் பாதுகாத்திட அறிவுறுத்தியுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றிய பா.ஜ.க. அரசின் 11 ஆண்டுகள் என்பது,
மக்களின் உரிமைகளை நசுக்குவது,
மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பது,
எங்கும் – எதிலும் இந்தி & சமஸ்கிருதத்தைத் திணிப்பது,
மதவாதத்தை வளர்ப்பது,
முக்கியமாக, தமிழ்நாட்டை வஞ்சிப்பது என #NationalDictatorshipArrangement ஆட்சியை நடத்தி வருவதற்குத்… https://t.co/AUUM58fbVq pic.twitter.com/Xwye6nHMbC— M.K.Stalin (@mkstalin) July 18, 2025
லேட்டஸ்ட் செய்திகள்
வயலில் விவசாயிகளை நேரடியாக சந்தித்து பேசிய இபிஎஸ்.!
July 18, 2025