திருவள்ளூர் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 3 டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை.!

குற்றவாளியை கைது செய்ய எஸ்பி தலைமையில் 3 டிஎஸ்பி குழுக்களை அமைத்து காவல்துறை இயக்குநர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டுள்ளார். 

Tiruvallur - girlkidnapped

திருவள்ளூர் : திருவள்ளூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, குற்றவாளியைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 10 வயது மாணவி ஒருவர், நடுரோட்டில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் சனிக்கிழமை அன்று, சிறுமி சாலையில் நடந்து சென்றபோது, அவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வாயை மூடி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது.

இந்த சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது, இது பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் கடும் கண்டனத்தை எழுப்பியுள்ளது. ஆனால், சம்பவம் நடந்து இன்றுடன் 7 நாட்கள் ஆகிறது, இன்னும் குற்றவாளியை போலீசார் ஏன் கைது செய்யவில்லை என்று உறவினர்கள் போலீசாரிடம் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சமூக ஊடகங்களிலும் இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் தங்கள் அதிருப்தியையும், கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில், குற்றவாளியை கைது செய்ய எஸ்பி தலைமையில் 3 டிஎஸ்பி குழுக்களை அமைத்து காவல்துறை இயக்குநர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, இந்த தனிப்படைகள் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் மேற்பார்வையில் செயல்படுகின்றன. மூன்று துணை காவல் கண்காணிப்பாளர்கள் (டிஎஸ்பிக்கள்) – ஜெயஸ்ரீ (கும்மிடிப்பூண்டி), தமிழரசி (திருவள்ளூர்), மற்றும் புகழேந்தி (செங்கல்பட்டு)  தலைமையில் இந்த தனிப்படைகள் சம்பவம் நடைபெற்ற பகுதியில் பதிவான
செல்போன் சிக்னல், வாகன எண்கள் சேகரித்து  விசாரணையை மேற்கொண்டு வருகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்