நாளை விண்ணில் பாயும் ”நிசார்” செயற்கைக்கோள்.! கவுண்ட் டவுன் ஸ்டார்ட்.!

இஸ்ரோ - நாசா இணைந்து உருவாக்கிய 'நிசார்' செயற்கைக்கோளை சுமந்தபடி GSLV F-16 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்பட உள்ளது.

NISAR -NASA - ISRO

ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR) செயற்கைக்கோளை ஏவுவதற்காக ஜி.எஸ்.எல்.வி. எப்-16 (GSLV F-16) ராக்கெட் நாளை (ஜூலை 30, 2025) விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

அதன்படி, GSLV F-16 ராக்கெட் ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை மாலை 5.50 மணிக்கு ஏவப்படும் நிலையில், இப்பொது கவுண்ட் டவுன் தொடங்கியது. 12 நாட்களுக்கு ஒருமுறை பூமியை சுற்றி வந்து துல்லியமான தரவுகள், HD புகைப்படங்களை இது அனுப்பும் என இஸ்ரோ தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.

இது இஸ்ரோ மற்றும் நாசாவின் முதல் கூட்டு செயற்கைக்கோள் ஆகும். இது இரட்டை அதிர்வெண் (Dual-frequency) செயற்கைத் துளை ரேடார் (SAR) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது, இதில் நாசாவின் L-பேண்ட் மற்றும் இஸ்ரோவின் S-பேண்ட் அடங்கும்.

ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தியதும், 12 மீட்டர் ரேடார் பிரதிபலிப்பு ஆன்டெனா 9 மீட்டர் தொலைவில் உள்ள சிக்கலான பூம் மூலம் விரிவாக்கப்படும்.

ஏவப்பட்ட பிறகு முதல் 90 நாட்களில், செயற்கைக்கோளின் அமைப்புகள் மற்றும் கருவிகள் சோதனை செய்யப்பட்டு, அறிவியல் செயல்பாடுகளுக்கு தயாராக்கப்படும். இது மூன்று ஆண்டு கால பயண வாழ்க்கையில் தொடர்ந்து புவியை கண்காணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்