மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன. இந்த தகவலை இந்திய ராணுவத்தின் கிழக்கு கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த மோதலில் கொல்லப்பட்ட ஆயுத கும்பலைச் சேர்ந்த நபர்கள் யார் என்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இந்தியா-மியான்மர் எல்லைக்கு அருகிலுள்ள சந்தேல் மாவட்டத்தில் நேற்றிரவு (மே 14 அன்று) ஆயுதமேந்திய குழுவினர் நடமாட்டம் குறித்து உளவுத்துறை தகவல் […]
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை தெரிவித்ததற்காக அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவரது சர்ச்சைக்குரிய அறிக்கையை மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் இன்றைய தினம் தானாக முன்வந்து விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதுல் ஸ்ரீதரன் மற்றும் அனுராதா சுக்லா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், அவர் மீது வழக்குப் பதிவு செய்ய மத்தியப் பிரதேச காவல்துறைக்கு உத்தரவிட்டது. அன்படி, இந்த வழக்கில் கடுமையான […]
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ”பார்கவஸ்த்ரா” ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம் தயாரித்த ‘பார்கவஸ்த்ரா’ ராக்கெட் வானில் பறந்த டிரோனை வெற்றிகரமாக தாக்கி அழித்தது. மே 13 அன்று மூத்த ராணுவ வான் பாதுகாப்பு (AAD) அதிகாரிகள் முன்னிலையில் நடத்தப்பட்ட சோதனைகளில், மூன்று சோதனைகளில் ஏவப்பட்ட நான்கு ராக்கெட்டுகளுமே வானில் பறந்த டிரோன்களை அழித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்கவஸ்த்ரா 2.5 கி.மீ தூரம் வரை சிறிய ட்ரோன்களைக் கண்டறிந்து […]
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி ஊடகமான TRT Word-ன் X தள கணக்கையும் மத்திய அரசு இந்தியாவில் முடக்கியுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் மோதலின்போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக பொய் பிரச்சாரத்தை செய்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், குளோபல் டைம்ஸ் என்பது சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குச் சொந்தமான பீப்பிள்ஸ் டெய்லியின் கீழ் வரும் ஒரு ஆங்கில டேப்ளாய்டு செய்தித்தாள் ஆகும், அதே […]
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை ‘பயங்கரவாதிகளின் சகோதரி’ என்று குறிப்பிட்டதற்கு கடும் எதிர்ப்புகளை சந்தித்த பின்னர் மன்னிப்பு கோரியுள்ளார். அமைச்சர் விஜய் ஷா நேற்றைய தினம், இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய அவர், ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுத்ததில் பிரதமர் மோடியின் தலைமையை அவர் பாராட்டினார். பின்னர், நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவர்களை, அவர்களின் சகோதரியை வைத்து பிரதமர் […]
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நேற்று ஓய்வு பெற்ற நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்குப் பதிலாக நீதிபதி கவாய் நியமிக்கப்பட்டார். முன்னதாக கடந்த மாதம் 30 ஆம் தேதி, இந்தியாவின் 52வது தலைமை நீதிபதியாக நீதிபதி கவாய் நியமனம் தொடர்பான அறிவிப்பை சட்ட அமைச்சகம் வெளியிட்டது. ஏப்ரல் 16 அன்று, தலைமை நீதிபதி கன்னா அவரது பெயரை […]
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான செய்தியாக இருந்து வருகிறது. இந்த சூழலில் பஞ்சாப் மாநிலம் ஆதம்பூரில் உள்ள விமானப்படை தளத்தில் வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அதில் பேசிய அவர் ” சக்திவாய்ந்த நமது ஏவுகணைகள் சத்தத்துடன் எதிரி நாட்டு இலக்குகளை அடையும்போது, அவர்களுக்கு அந்த சத்தம் ‘பாரத் மாதா கீ ஜெய்’ என்றுதான் கேட்கும். பாரத் மாதா கீ […]
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. போர் நிறுத்தம் செய்யப்பட்டது முதல் அதற்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தான் முதல் ஆளாக தனது சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்திருந்தார். எனவே, இந்தியா VS பாகிஸ்தான் போர் நிறுத்தம் ட்ரம்ப் எதற்காக அறிவித்தார் என்கிற கேள்விகளும் எழுந்தது. இந்த சூழலில், நேற்று மோதலை நிறுத்தாவிட்டால் வர்த்தகம் செய்ய மாட்டேன் எனக் […]
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி போர் நிறுத்தம் செய்யப்பட்டது.. இருப்பினும் பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அத்துமீறினால் பதிலடி வழங்கப்படும் எனவும் இந்தியா தெரிவித்து வருகிறது. இந்தியா VS பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்தவுடன் முதல் அறிவிப்பாக ட்ரம்ப் தான் வெளியீட்டு இருந்தார். அதனை தொடர்ந்து வர்த்தக தொடர்புகளை நிறுத்தி விடுவேன் […]
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம், காஷ்மீர் பிரச்சினை, தீவிரவாத நடவடிக்கைகள், மற்றும் எல்லை மீறல்கள் ஆகியவற்றால் மேலும் தீவிரமடைந்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி ரெசிஸ்டன்ட் ப்ரண்ட்’ (லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பு) பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து நடத்திய தாக்குதலில் பரிதாபமாக 26 பேர் உயிரிழந்தனர். […]
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை கலந்துரையாடினார். அப்போது அவர் அந்தப் பகுதிகளில் பதுங்கு குழிகள் கட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அது மட்டுமின்றி, பாகிஸ்தான் அத்துமீறியதால் எல்லைப் பகுதிகளில் வசித்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இன்னும் அங்கு வசிக்கும் பலரும் வீட்டை விட்டு பயத்தில் வெளியே கூட வராமல் இருக்கிறார்கள். அப்படி அச்சப்பட்டு வீட்டிற்குள்ளே இருக்கும் மக்களுக்கு அறிவுரை வழங்கும் […]
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை அதிகாரிகள், டெல்லியில் இரண்டாவது நாளாக இன்று செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு பாகிஸ்தானுடனான போர் நிறுத்தத்திற்குப் பிறகு இரு நாடுகளின் எல்லைகளிலும் நிலைமை எப்படி இருக்கிறது? போர் நிறுத்தத்திற்குப் பிறகு பாகிஸ்தானின் நிலைப்பாடு என்ன? வீரர்களுக்கு என்ன வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன? இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் இதுபோன்ற கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ளனர். அப்பொழுது, […]
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு இரண்டு நாடுகளும் கலந்துபேசி போரை சுமூகமாக முடித்துக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அத்துமீறினால் பதிலடி வழங்கப்படும் எனவும் இந்தியா தெரிவித்து வருகிறது. எனவே, இன்னும் இந்த விவகாரம் தலைப்பு செய்தியாக இருந்து வருகிறது. இந்த சூழலில், முப்படை அதிகாரிகள் டெல்லியில் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து போரில் பல புதிய யுக்திகளை […]
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி ரெசிஸ்டன்ட் ப்ரண்ட்’ (லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பு) பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து நடத்திய தாக்குதலில் பரிதாபமாக 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதல், இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது அத்துடன் பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக எழுந்தது. எனவே, இந்தியா தகுந்த பதிலடி கொடுத்து போரை தொடங்கியது […]
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார். நேற்று இரவு எல்லையில் முழுமையான அமைதி நிலவியதாகவும், துப்பாக்கிச் சூடு சம்பவம் எதுவும் இல்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு சனிக்கிழமை மாலை போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நேரத்தில் இஸ்ரோ தலைவரின் இவ்வாறு கூறியிருக்கிறார். இது தொடர்பாக, நேற்றைய தினம் […]
டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் ராஜீவ் கய், விமானப்படை சார்பாக ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, கடற்படை சார்பாக வைஸ் அட்மிரல் ஏ.என்.பிரமோத் மற்றும் எஸ்.எஸ்.ஷார்தா ஆகியோர் டெல்லியில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினர். அப்போது, எத்தனை பாகிஸ்தான் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதியிடம் கேட்டபோது, ”தாக்குதல் நடத்த பாகிஸ்தான இந்திய ராணுவ நிலைகளை […]
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி ரெசிஸ்டன்ட் ப்ரண்ட்’ (லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பு) பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து நடத்திய தாக்குதலில் பரிதாபமாக 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதல், இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது அத்துடன் பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக எழுந்தது. எனவே, இந்தியா தகுந்த பதிலடி கொடுத்து போரை […]
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை தொடர்ந்து, பாகிஸ்தானின் ஆதரவுடன் இயங்கும் லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ட் ப்ரண்ட்’ என்ற தீவிரவாத அமைப்பு தான் இந்த தாக்குதலை நடத்தியாக குற்றம்சாட்டி இந்தியா பதிலடி கொடுக்கும் வகையில் போரை தொடங்கியது. இந்தியா பாகிஸ்தான் போர் வெடித்த காரணத்தால் உலக அளவில் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று போரை நிறுத்திக் கொள்ள இரு […]
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையாக , இந்தியா பாகிஸ்தானின் ஆதரவுடன் இயங்கும் லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ட் ப்ரண்ட்’ என்ற தீவிரவாத அமைப்பு தான் இந்த தாக்குதலை நடத்தியாக குற்றம்சாட்டி போரை தொடங்கியது. இந்தியா பாகிஸ்தான் போர் வெடித்த காரணத்தால் உலக அளவில் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் […]
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று, துப்பாக்கிச் சண்டையும், ராணுவ நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டிருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி நேற்று அறிவித்தும் இருந்தார். இந்த சூழலில் இந்திய விமானப்படை (IAF) தரப்பில் இருந்து ஒரு புதிய விளக்கத்தை கொடுத்துள்ளது. ஆபரேஷன் சிந்தூரின் தற்போதைய நிலை குறித்து […]