2015 வெள்ளத்திலிருந்து அடிமைகள் படம் கற்கவில்லை. இன்னும் வீரியமாக ஊழல் செய்கின்றனர். தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பெய்த கனமழையால், சாலைகள் எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்நிலையில், திமுகவின் இளைஞரணி தலைவர் உதயநிதி அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘வீடு, சாலை எங்கும் வெள்ளம். ஒரு நாள் மழைக்கே சென்னை மிதக்கிறது. உள்ளாட்சி துறையை ஊழலாட்சி துறை ஆக்கிவிட்ட வேலுமணியும், அவரது டெண்டர் பார்ட்னர் எடப்பாடியும் […]
திருமண விழாவில் எம்ஜிஆர்-ன் பாடலை பாடி அசத்திய அமைச்சர் வீரமணி. ஆம்பூர் நகர கழக இணை செயலாளர் லலிதா அன்பரசன் அவர்களின் மகனுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில், வணிகவரி மற்றும் பத்திர பதிவு அமைச்சர் kc.வீரமணி அவர்கள் கலந்து கொண்டார். இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் வீரமணி, பாடகர் குழுவுடன் இணைந்து புரட்சி தலைவர் எம்ஜிஆ-ரின் பாடலான ‘நாளை நமதே’ என்ற பாடலை பாடி தொண்டர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளார். இவர் […]
ஒரே விமானத்தில் பயணிக்க உள்ள முதல்வர் பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலின். ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உருவச்சிலை அமைந்துள்ளது. இவரது பிறந்தநாள் ஆண்டுதோறும், அக்டொபர் 30-ம் தேதி தேவர் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. நாளை நடைபெறவுள்ள தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், இன்று மாலை சென்னையில் இருந்து மதுரை செல்ல டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும், தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து […]
வியட்நாம் நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலி. வியட்நாமில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த தொடர்மழையால், பல இடங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மதியம் அங்கு பலத்த மழையுடன் கூடிய சூறாவளி புயல் வீசியது. இதனால், அங்கு பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. டிரா வாங் மற்றும் டிராங் லெங் மலைப்பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல வீடுகள் புதைந்தது. இந்த இடிபாடுகளில் இருந்து 8 பேரின் உடல் மீட்கப்பட்ட நிலையில், மேலும் […]
குஜராத்தின் முன்னாள் முதல்வர் காலமானார். முன்னாள் முதல்வர் கேசுபாய் படேலுக்கு சென்ற மாதம் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின், அவரது உடல் நலம் முன்னேற்றம் கண்டது. இந்நிலையில், நேற்று இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சற்றுமுன் இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவு அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாலை வரை சென்னையில் மழை நீடிக்கும் வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பருவமழை பெய்து வருகிற நிலையில், பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சென்னையில், சாலையில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும், சாலையில் வாகனம் ஓட்டுபவர்கள் கவனமாக ஓட்டுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், மேலும் 5 […]
பிரசவ வலிக்கு பயந்து தீக்குளித்த 5 மாத கர்ப்பிணி. சென்னை புதுவண்ணார்பேட்டை, இந்திரா நகர் 7-வது தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி சுஷ்மிதா(23). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்த நிலையில், இவர் 5 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இவருக்கு கர்ப்ப காலத்தில் அடிக்கடி வயிறுவலி ஏற்படுவதுண்டு. இதனையடுத்து, சுஷ்மிதா தனக்கு அடிக்கடி வயிறுவலி ஏற்படுவதாக, வீட்டில் இருப்பவர்களிடம் கூறியுள்ளார். அதற்கு அவர்கள், பிரசவம் ஆகும்வரை இப்படி தான் இருக்கும், பொறுத்துக்கொள்ளுமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து, சுஷ்மிதா, […]
சென்னை மலர்சந்தையில் குளம்போல் தேங்கிய மழைநீரால் வியாபாரிகள் தவிப்பு. பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னையில், நள்ளிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இந்நிலையில், சென்னை வானகரத்தில் செயல்பட்டு வரும் தற்காலிக மலர்சந்தையில், மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால், மலர்சந்தைக்கு பூ வாங்குவதற்கு வரும் வியாபாரிகள், பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், சென்னையில், மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை […]
டெல்லியில் காற்று மாசு ஏற்படுத்தினால் ரூ.1 கோடி அபராதம். டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிற நிலையில், இதனை தடுக்க டெல்லி அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. அந்த சட்டத்தின்படி, காற்று மாசு ஏற்படுத்தினால், ரூ.1 கோடி அபராதமும், 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லியில் காற்று மாசை தடுக்க வாரியம் அமைக்கவும் அவசர சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ள நிலையில், காற்று மாசை தடுக்க அமைக்கப்படவுள்ள வாரியத்தில், அரசு துறை அதிகாரிகள், மற்றும் மாநில […]
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், மேலடுக்கு சுழற்சி நீடிக்கிற நிலையில், தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், மேலடுக்கு சுழற்சி நீடிக்கிறது. இதனையடுத்து, தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில், நேற்று நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிற நிலையில், மேலும் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும், தமிழகம் முழுவதும் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
விசிக தலைவர் திருமாவளவன் உட்பட 200 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு. ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி அரசியல் பிரபலங்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக பலரும் தங்களது கண்டன குரலை எழுப்பி வருகிற நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில், ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், இந்த போராட்டத்தில் ஈடுபட்ட விசிகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. […]
உங்கள் வாக்குகள் மூலமாக தான் ட்ரம்பை வீட்டுக்கு அனுப்ப முடியும். அமெரிக்காவில் வருகிற 3-ம் தேதி, அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளது. இந்த தேர்தல் பிரச்சாரத்தில், அதிபர் ட்ரம்ப் மற்றும் அதிபர் வேட்பாளரான ஜோ பைடன் இருவரும், ஒருவருக்கொருவர், மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், லாஸ் வேகாஸ் பிரச்சாரத்தில் கமலா ஹாரிஸ் அவர்கள் பேசுகையில், ‘அமெரிக்காவை ஒற்றுமைபடுத்த ஜோ பிடனுக்கு வாக்கு அளியுங்கள் என்றும், உங்கள் வாக்குகள் மூலம் தான் […]
பிஜேபியில் பதவியை பெறுவதற்கு அடிப்படை தகுதியே பெண்களை இழிவுபடுத்துவதுதானா? – எம்.பி.ஜோதிமணி மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில், சண்முக சுப்பையா இடம்பெற்றதற்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பெண்களிடம் ஆபாசமாக நடத்து கொண்ட பாஜகவின் அகில பாரதிய வித்யா பரிசத் தேசிய தலைவர் சண்முக சுப்பையாவுக்கு பதவி வழங்கப்பட்டதற்கு ஜோதிமணி கண்டனம் தெரிவித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,’ஒரு பெண் வீட்டின் முன் சிறுநீர் கழித்து, அவரிடம் ஆபாசமாக அறுவெறுப்பாக […]
முடி உதிர்வை தடுக்க சூப்பர் டிப்ஸ். பொதுவாக அனைவருமே நமது கூந்தலின் மீது தனி காவானம் செலுத்துவதுண்டு. அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி. அதேசமயம், இளம் தலைமுறையினர் தங்களது கூந்தல் வளர்ச்சியின் மீது தனி கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், பல பக்கவிளைவுகளை விளைவிக்கக் கூடிய செயற்கையான மருந்துகளை வாங்கி உபயப்படுத்துகின்றனர். தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில் முடி உதிர்வை கட்டுப்படுத்துவது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை சின்ன வெங்காயம் தேங்காய் எண்ணெய் […]
புதிய கல்விக்கொள்கை குறித்து பல்கலைக்கழத்திற்கு மீண்டும் கடிதம் அனுப்பிய யுஜிசி. மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் புதிய கல்வி வரைவு கொள்கையை வெளியிட்டது. இந்த கல்வி கொள்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், யுஜிசி புதிய கல்வி கொளகையை விரைந்து அமல்படுத்த கோரி, பல்கலைக்கழகங்களுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. மேலும், நவ.16-க்குள் இணையவழி கருத்தரங்கை நடத்தி, தேசிய கல்விக் கொள்கையிற் அமல்படுத்த வேண்டும் என நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி சுற்றறிக்கை […]
உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது இதற்காக தான். நடிகர் விஜய்சேதுபதி இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாக இருந்த 800 படத்தில் நடப்பதற்கு தமிழகத்தில் கடும் எதிப்பு கிளம்பியது. எதிர்ப்பினை தொடர்ந்து, விஜய்சேதுபதி, இந்த படத்தில் இருந்து விலகினார். இந்நிலையில், இயக்குநர் சீனுராமசமி செய்தியாளர் சந்திப்பில் தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, விஜய்சேதுபதிக்கு எதிராக ட்வீட் செய்ததாக தொடர்ந்து மிரட்டல் வருகிறது. விஜய்சேதுபதிக்கும், எனக்கும் தனிப்பட்ட […]
2021ம் ஆண்டில் 23 நாள்கள் அரசு விடுமுறை. 2021-ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்களுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையின்படி, அடுத்த ஆண்டு 23 நாட்கள் மட்டுமே அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணை அறிவிப்பின் படி, எந்தெந்த நாட்கள் விடுமுறை என்பது குறித்த விபரங்கள், பின்வரும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Breaking: 2021 ஆம் ஆண்டிற்கான 23 நாட்கள் அரசு விடுமுறை அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது! pic.twitter.com/qXSvKoyzzh — Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) […]
உலக அளவில் 15% கொரோனா இறப்புக்கு காரணம் காற்று மாசுபாடு. உலக அளவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. ஜெர்மனியின் மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட் ஃபார் கெமிஸ்ட்ரி கல்வி மைய ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், ஐரோப்பாவில் காற்று மாசுபாட்டுடன் தொடர்புடைய கொரோனா இறப்புகளின் விகிதம் சுமார் 19 சதவீதமாகவும், வட அமெரிக்காவில் இது 17 சதவீதமாகவும், கிழக்கு ஆசியாவில் 27 சதவீதமாகவும் கண்டறிந்துள்ளனர். கார்டியோவாஸ்குலர் ரிசர்ச் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவில், கொரோனா […]
மீண்டும் இந்தியாவிற்குள் நுழையும் ஹார்லி டேவிட்சன். அமெரிக்காவின் பிரபல மோட்டார் நிறுவனமான, ஹார்லி டேவிட்சன் நிறுவனம் கடந்த 111 ஆண்டுகளாக, இந்தியாவில் தனது பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில், ஹரியானாவில் மட்டும் தான் ஒரு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் மாடல் பைக்குகள் இளைஞர்களால் பெரிதும் விரும்பப்பட்டது. இந்நிலையில், ஹார்லி டேவிட்சன் நிறுவனம், உலக நாடுகளில் குறைவான அளவே தங்கள் பைக்குகள் விற்பனையாகும், நாடுகளில் இருந்து, வெளியேற திட்டமிட்டது. இதனையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு […]
பாஜக-வின் விளம்பரத்தில் எம்.ஜி.ஆர் புகைப்படம். பாஜக சார்பில், நவ.6-ம் தேதி வெற்றிவேல் யாத்திரை தொடங்கவுள்ள நிலையில், இதற்கான வீடியோ வெளியிடப்பட்டது. இந்த வீடியோவில், ‘பொன்மனச் செம்மலின் அம்சமாக மோடியை கண்டோமடா’ என்ற வரிகள் தொனிக்க, இதில் பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர் புகைபபடம் இடம்பெற்றுள்ளது. இதற்க்கு அதிமுக சார்பில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளது. இதுகுறித்து அஇஅதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் அவர்கள் கூறுகையில், ‘அனைத்து மக்களும் எம்.ஜி.ஆரை போற்றுவார்கள். ஆனால், பிற காட்சிகள் எம்.ஜி.ஆர் புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது […]