243 கி.மீ மைலேஜ்...குடும்பங்களுக்காக வந்திறங்கிய புதிய "Simple Wave EV"!

சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் புதிய Simple Wave ஸ்கூட்டர் 4 பேட்டரி ஆப்ஷன்களுடன் களமிறங்கியுள்ளது.

Hero Image

டெல்லி : இந்திய மின்சார இருசக்கர வாகன சந்தையில் அதிவேகம் மற்றும் அதிக மைலேஜ் தரும் வண்டிகளை அறிமுகம் செய்து மக்கள் மத்தியில் பிரபலமான சிம்பிள் எனர்ஜி நிறுவனம், தனது அடுத்த அதிரடி படைப்பாக சிம்பிள் வேவ் (Simple Wave) எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. இதுவரை ஸ்போர்ட்டியான மாடல்களில் கவனம் செலுத்தி வந்த இந்த நிறுவனம், தற்போது தினசரி நகர்ப்புறப் பயன்பாடு, நடுத்தர குடும்பங்களின் தேவைகள் மற்றும் பட்ஜெட் ஆகிய மூன்றையும் மனதில் வைத்து இந்த புதிய ஸ்கூட்டரை வடிவமைத்துள்ளது.

வாடிக்கையாளர்களை சுண்டி இழுக்கும் வகையில் அமைந்துள்ள இந்த வண்டியின் விலை, மைலேஜ் மற்றும் வேற என்னென்ன ஸ்பெஷல் விஷயங்கள் உள்ளன என்பதை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

வியக்க வைக்கும் மைலேஜ்

இந்த ஸ்கூட்டரின் மிக முக்கிய சிறப்பம்சமே, வாடிக்கையாளர்கள் தங்களின் தினசரி பயணத் தேவை மற்றும் பட்ஜெட்டிற்கு ஏற்ப தேர்வு செய்துகொள்ளும் வகையில் மொத்தம் நான்கு விதமான பேட்டரி ஆப்ஷன்களில் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Wave electric scooter range and battery specs.webp
  • இதன் ஆரம்ப மாடலான 2.2 கிலோவாட் ஹவர் (kWh) பேட்டரி கொண்ட வேரியண்ட் சிங்கிள் சார்ஜில் 110 கிலோமீட்டர் மைலேஜ் (IDC Range) தருகிறது.
  • அடுத்ததாக இருக்கும் 2.7 கிலோவாட் ஹவர் பேட்டரி மாடல் 132 கிலோமீட்டர் மைலேஜையும், 3.7 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்ட மாடல் 171 கிலோமீட்டர் மைலேஜையும் வாரி வழங்குகின்றன.
  • எல்லாவற்றிற்கும் மேலாக, இதன் டாப் வேரியண்ட்டில் மிகப்பெரிய 5 கிலோவாட் ஹவர் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது எலக்ட்ரிக் வாகன உலகையே வியக்க வைக்கும் வகையில் ஒரே ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 243 கிலோமீட்டர் வரை அசாத்திய மைலேஜ் தரும் என்று நிறுவனம் பெருமையுடன் அறிவித்துள்ளது.

இதனால் தினசரி அலுவலகம் செல்பவர்கள் முதல் லாங் ரைடு பிரியர்கள் வரை அனைவரும் தங்களுக்கு ஏற்ற மாடலை எளிதாகத் தேர்வு செய்யலாம்.

வேற என்ன ஸ்பெஷல் இருக்கு?

தொழில்நுட்ப வசதிகளில் இந்த ஸ்கூட்டர் ஒரு மினி காரை ஞாபகப்படுத்துகிறது. இதில் 480 மெகாஹெர்ட்ஸ் ஏஆர்எம் கார்டெக்ஸ்-எம்85 (ARM Cortex-M85) கிராபிக்ஸ் மைக்ரோகண்ட்ரோலர் மூலம் இயங்கக்கூடிய மிகப்பெரிய 7-இன்ச் டிஎஃப்டி (TFT) டிஜிட்டல் டிஸ்ப்ளே திரை கொடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திரை மூலம் வண்டியின் வேகம் மற்றும் பேட்டரி அளவை அறிவதோடு மட்டுமன்றி, திரையிலேயே நேவிகேஷன் மேப் (Turn-by-turn navigation) பார்த்துக்கொண்டு வழிகளைத் துல்லியமாகக் கண்டறியலாம்.

Simple Wave electric scooter gets 7 inch TFT display.webp

மேலும் ப்ளூடூத் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனை இணைத்து, வண்டி ஓட்டும்போது வரும் போன் கால்களைப் பேசுவதற்கும், உங்களுக்குப் பிடித்த இசையைக் கட்டுப்படுத்துவதற்கும் (Music and Call Control) தனி வசதிகள் உள்ளன. முக்கியமாக, வண்டி ஓட்டும்போது ரைடரின் கவனம் சிதறாமல் இருப்பதற்காக 'நான்-டச் இன்டராக்‌ஷன்' (Non-touch interaction) எனப்படும் தொடுதல் இல்லாத கட்டுப்பாட்டுத் தொழில்நுட்பமும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. இதுதவிர, மாத்திரைகள் அல்லது அவசர மருந்துகளைப் பாதுகாப்பாக வைப்பதற்காக பில் ஸ்டோரேஜ் (Pill Storage) என்ற பிரத்யேக வசதியும் உள்ளது. வண்டியில் அமர்ந்திருக்கும் போதே இதை மிக எளிதாகத் திறந்து பயன்படுத்த முடியும் என்பது நடுத்தரக் குடும்பங்களுக்கு மிகவும் பயனுள்ள அம்சமாகும்.

ஸ்பீடு மற்றும் வடிவமைப்பு

குடும்பத்தினருடன் பாதுகாப்பாகவும் சௌகரியமாகவும் பயணிக்கும் வகையில் இதன் கட்டமைப்பு மிக வலுவாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 90 கிலோமீட்டர் வேகம் (Top Speed) வரை செல்லக்கூடிய திறன் கொண்டது. இதனால் சிட்டி சாலைகளில் மட்டுமன்றி நெடுஞ்சாலைகளிலும் வண்டியை மின்னல் வேகத்தில் செலுத்தலாம்.இந்தியச் சாலைகளில் இருக்கும் குண்டும் குழியுமான பள்ளங்களை அசால்ட்டாகக் கடப்பதற்காக வண்டியின் அடிப்பகுதி தட்டாதவாறு 175 மில்லிமீட்டர் என்ற மிகச் சிறந்த கிரவுண்ட் கிளியரன்ஸ் (Ground Clearance) கொடுக்கப்பட்டுள்ளது.

New Simple Wave electric scooter.webp

மேலும், உயரம் குறைவான நபர்களும், பெண்களும் வண்டியைப் பயமில்லாமல் கையாளுவதற்கு ஏற்ப 775 மில்லிமீட்டர் என்ற கச்சிதமான சீட் உயரம் (Seat Height) இதில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்பக்க டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் மற்றும் சிறந்த பிரேக்கிங் சிஸ்டம் இருப்பதால் சொகுசான பயணத்திற்கு இது நூறு சதவீதம் உத்தரவாதம் அளிக்கிறது.

எப்போ வரும்? எங்கே கிடைக்கும்?

புதிய சிம்பிள் வேவ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வரவிருக்கும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இந்திய சந்தையில் மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் ஆரம்ப விலை தோராயமாக 1.30 லட்சம் ரூபாய் முதல் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.விற்பனைக்கு வந்தவுடன் தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, சேலம் உள்ளிட்ட அனைத்து முக்கிய நகரங்களில் உள்ள சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் ஷோரூம்களில் இந்த வண்டி காட்சிக்கு வைக்கப்படும். அங்கு நீங்கள் நேரடியாகச் சென்று வண்டியை டெஸ்ட் டிரைவ் செய்து, உங்களுக்குப் பிடித்த பேட்டரி வேரியண்ட்டை முன்பதிவு செய்து வாங்கிக் கொள்ளலாம்.

243 கி.மீ மைலேஜ்...குடும்பங்களுக்காக வந்திறங்கிய புதிய "Simple Wave EV"!