பைக் வாங்கும்போது இந்த தவறை மட்டும் செய்யாதீங்க! பணம் மிச்சப்படுத்த செம டிப்ஸ்

ரூ.1 லட்சத்துக்குள் கிடைக்கும் பைக்குகள், விலை, மைலேஜ், EMI சலுகைகள் மற்றும் ஷோரூமில் பைக் வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் பற்றி விவரமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Hero Image

டெல்லி : நம் நாட்டில் பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில், நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள 100-125சிசி பைக் ஷோரூம்களில் வாடிக்கையாளர்களின் வருகை திடீரென அதிகரித்துள்ளது. நடுத்தர மக்கள் தங்களது அன்றாடப் பயன்பாட்டிற்காகத் தங்களின் எளிய பட்ஜெட்டுக்குள் பைக்குகளை வாங்குவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, என நெருங்கி வரும் நிலையில், பைக் நிறுவனங்கள் தற்போது பலவிதமான கவர்ச்சிகரமான சலுகைகளும், எளிதான பைனான்ஸ் வசதிகளும் வழங்கப்பட்டு வருவதால், இன்றே உங்களது கனவுப் பைக்கை புக் செய்ய இதுவே சரியான நேரமாகும்.

விலை நிலவரம் மற்றும் பட்ஜெட்

ஷோரூமுக்குச் செல்வதற்கு முன்பு, நீங்கள் வாங்க விரும்பும் பைக்கின் ஆன்-ரோடு (On-Road) விலையைத் தெளிவாகச் சரிபார்ப்பது மிகவும் அவசியமாகும். தற்போதைய நிலவரப்படி, சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான முன்னணி கம்யூட்டர் பைக்குகள் ரூ. 1 லட்சத்திற்கும் குறைவான பட்ஜெட்டிலேயே கிடைக்கின்றன.

குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், மிகவும் பிரபலமான ஹீரோ ஸ்பெப்ளண்டர் பிளஸ் (Hero Splendor Plus) மற்றும் ஹோண்டா ஷைன் 100 (Honda Shine 100) பைக்குகளின் விலை ரூ. 83,000 முதல் ரூ. 95,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விலைகள் அந்தந்த நகரங்களின் வரி மற்றும் பதிவுக் கட்டணங்களுக்கு ஏற்ப சிறிய அளவில் மாறுபடலாம்.

முதல்முறையாக பைக் வாங்குவோரைக் கவர்வதற்காக ஷோரூம்களில் 'ஜீரோ-காஸ்ட் இஎம்ஐ' (Zero-cost EMI) போன்ற சலுகைகள் வாரி வழங்கப்படுகின்றன. ஆனால், நீங்கள் எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடும் முன் பைனான்ஸ் நிபந்தனைகளை மிகக் கவனமாகப் படிக்க வேண்டும். பல சமயங்களில் செயலாக்கக் கட்டணங்கள் (Processing fees) அல்லது மறைக்கப்பட்ட கட்டணங்கள் உங்கள் மொத்த விலையை அதிகரித்துவிடும். எனவே, பணம் செலுத்துவதற்கு முன்பாக முழுமையான செலவு விவரங்களை எழுத்துப்பூர்வமாக கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது.

மைலேஜ் கணக்கு

தற்போது புதிதாகப் பதிவு செய்யப்படும் அனைத்துப் பைக்குகளும் E20 எரிபொருள் விதிகளுக்கு உட்பட்டவையாக இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பழைய வகை எரிபொருட்கள் புதிய இன்ஜின்களைப் பழுதாக்கக்கூடும் என்பதால் இந்த விதி கொண்டுவரப்பட்டுள்ளது.

மைலேஜைப் பொறுத்தவரை, 100சிசி பைக்குகள் ஒரு லிட்டருக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும். அதேசமயம், பிரிமியம் 125சிசி பைக்குகள் பொதுவாக 50 முதல் 55 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.எனவே உங்களுடைய தேவை என்பதை தெரிந்துகொண்டு உங்களுக்கு எந்த மைலேஜ் பைக் செட் ஆகுமோ அதனை வாங்கி கொள்ளுங்கள்.

ஷோரூமுக்குச் செல்லும் முன் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்

VIN எண் சோதனை: உங்களுக்குப் பிடித்த பைக்கைப் பதிவு செய்வதற்கும் முன்பு, அதன் வாகன அடையாள எண்ணை (Vehicle Identification Number - VIN) சரிபார்ப்பது அவசியம்.

PDI பரிசோதனை: டெலிவரி எடுப்பதற்கு முன் பிடிஐ (Pre-Delivery Inspection) பரிசோதனை செய்வதன் மூலம், கீறல்கள் விழுந்த அல்லது சேதமடைந்த பைக்கை வாங்குவதைத் தவிர்க்கலாம்.

தேவையற்ற அக்சஸரீஸ்கள் வேண்டாம்: ஷோரூம்களில் உங்களிடம் திணிக்க முயலும் விலை உயர்ந்த அக்சஸரீஸ்களுக்குத் துணிந்து 'வேண்டாம்' (Say No) என்று சொல்லுங்கள்.

இந்தச் சிறிய முன்னெச்சரிக்கைகள் பண்டிகைக் காலத்தில் உங்களது பணத்தை மிச்சப்படுத்தப் பெரிதும் உதவும். உங்களது நகரத்தின் துல்லியமான விலைகளைச் சரிபார்த்து, தள்ளுபடிகளையும் பார்த்து வாங்குவதன் மூலம் உங்களது கனவு பைக்கைச் சிறந்த விலையில் பெறலாம்.