டெல்லி : ஹோண்டா மோட்டார்சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர் இந்தியா (HMSI) நிறுவனம் ஜூலை 24 அன்று தனது புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்தத் தயாராகியுள்ளது. குறிப்பாக ரூ. 1 லட்சத்திற்கும் குறைவான பட்ஜெட்டில் வசிக்கும் மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்வோரை இலக்காகக் கொண்டு இந்த மெகா லாஞ்ச் நடைபெறவுள்ளது. இது முற்றிலும் புதிய பைக்காகவோ அல்லது சிறந்த மைலேஜ் வழங்கும் ஸ்கூட்டராகவோ இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிநவீன ஃப்ளெக்ஸ்-ஃபியூவல் தொழில்நுட்பம்: ஹோண்டா வெளியிட்டுள்ள தகவல்களின், இந்த புதிய வாகனம் மேம்பட்ட ஃப்ளெக்ஸ்-ஃபியூவல் தொழில்நுட்பத்துடன் வெளிவர வாய்ப்புள்ளது. இதன் மூலம் வழக்கமான பெட்ரோலை விட மலிவான கலப்பு எரிபொருளைப் (Blended Fuel) பயன்படுத்த முடியும். இது சாமானியர்களின் மாத பெட்ரோல் செலவை பாதியாகக் குறைப்பதோடு, சுற்றுப்புறச் சூழலுக்கும் பெரும் நன்மையாக அமையும்.
என்ஜின் தேர்வுகள்: ஆட்டோமொபைல் துறை நிபுணர்களின் கணிப்புப்படி, ஹோண்டா நிறுவனம் புதிய CB300F ஃப்ளெக்ஸ்-ஃபியூவல் பைக்கைக் கொண்டுவரலாம் அல்லது பொதுமக்கள் மத்தியில் எப்போதுமே வரவேற்பை பெறும் 100சிசி முதல் 125சிசி வரையிலான பட்ஜெட் பைக் அல்லது ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு வாகனத்தை வாங்கும் போது வாடிக்கையாளர்கள் அதிகம் எதிர்பார்ப்பது அதன் எரிபொருள் திறன் (மைலேஜ்) மற்றும் பராமரிப்புச் செலவுதான். அந்த வகையில் இந்த புதிய மாடல்களின் மைலேஜ் எதிர்பார்ப்புகள் இதோ:
100சிசி - 125சிசி பட்ஜெட் மாடல்கள்: இந்தப் பிரிவில் வாகனம் களமிறங்கினால், நகர மற்றும் நெடுஞ்சாலைப் பயணங்களை உள்ளடக்கி தோராயமாக லிட்டருக்கு 60 முதல் 65 கி.மீ வரை மிகச்சிறந்த மைலேஜ் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தினசரி பல கிலோமீட்டர் பயணம் செய்பவர்களுக்கு இது மிகப்பெரிய பண மிச்சத்தைக் கொடுக்கும்.
குறைந்த பராமரிப்புச் செலவு: ஹோண்டாவின் இன்ஜின்கள் எப்போதுமே நீண்ட உழைப்புக்கும் குறைந்த மெயின்டனன்ஸுக்கும் பெயர் பெற்றவை. எனவே வாங்கிய பிறகு கூடுதல் செலவுகள் இருக்காது.
தற்போதுள்ள ஆக்டிவா அல்லது ஷைன் போன்ற பழைய மாடல்களை உடனடியாக வாங்க நினைத்தால், ஷோரூம்களில் உடடின டெலிவரி கிடைக்கலாம். ஆனால், நீங்கள் இப்போது விரைந்து வாகனம் வாங்கினால், நாளை ஹோண்டா அறிமுகப்படுத்தப் போகும் அதிநவீன தொழில்நுட்பங்கள், புதிய வடிவமைப்பு மற்றும் கூடுதல் மைலேஜ் பலன்களைத் தவறவிட நேரிடும்.
உங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்திற்கு முழுமையான பலன் கிடைக்க வேண்டுமெனில், ஜூலை 24 அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை ஒரே ஒரு நாள் காத்திருப்பது முற்றிலும் புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும். உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் சலுகைகளுடன் வரவிருக்கும் இந்த புதிய டூ-வீலர் பற்றிய முழுமையான சஸ்பென்ஸ் நாளை விலகவுள்ளது.
மேலும், ஹோண்டா எந்த மாடலை அறிமுகப்படுத்தப் போகிறது என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், புதிய Shine Flex-Fuel அல்லது CB300F Flex-Fuel மாடல் அறிமுகமாகலாம் என ஆட்டோமொபைல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.
