ரூ.80,000-க்குள் 55 KM மைலேஜ்! Yamaha RayZR 125 vs Honda Dio 125 எது வாங்கலாம்?

125cc ஸ்கூட்டர் வாங்கப் போறீங்களா? Yamaha RayZR 125 Hybrid மற்றும் Honda Dio 125 ஆகிய இரண்டில் எது பெஸ்ட் என்பதை தெரிந்துகொண்டு வாங்கிக்கொள்ளுங்கள்.

Hero Image

டெல்லி : இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் 125சிசி பிரிவில் ஸ்டைலான, ஷார்ப்பான மற்றும் அதிரடி செயல்திறன் கொண்ட ஒரு ஸ்போர்ட்டி ஸ்கூட்டரை வாங்க வேண்டும் என்று நினைத்தால், அனைவரின் மனதிலும் முதலில் தோன்றும் இரண்டு பெயர்கள் எது என்றால் யமஹா ரேஇசட்ஆர் 125 எஃப்ஐ ஹைபிரிட் (Yamaha RayZR 125 Fi Hybrid) மற்றும் ஹோண்டா டியோ 125 (Honda Dio 125)தான்.

இந்த இரண்டு ஸ்கூட்டர்களுமே கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் தினசரி வேலைக்குச் செல்பவர்களைக் குறிவைத்து, கச்சிதமான ஸ்போர்ட்டி லுக்குடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால், உங்கள் பட்ஜெட்டிற்கும் தேவைக்கும் இதில் எந்த ஸ்கூட்டர் சரியாக இருக்கும் என்ற குழப்பம் இருக்கிறதா? கவலையை விடுங்கள். இந்த இரண்டு ஸ்கூட்டர்களின் வடிவமைப்பு, இன்ஜின் பவர், மைலேஜ் மற்றும் வசதிகள் என்னென்ன என்பதைப் பற்றி இந்த பதிவில் விவரமாக பார்ப்போம்.

வடிவமைப்பு

யமஹா ரேஇசட்ஆர் 125 ஹைபிரிட்: இந்த ஸ்கூட்டர் பார்ப்பதற்கே ஒரு அதிநவீன ஸ்டெல்த்-ஃபைட்டர் (Stealth-fighter) போர் விமானம் போன்ற ஆக்ரோஷமான வடிவத்தைக் கொண்டுள்ளது. முன்பக்க ஏப்ரனில் பொருத்தப்பட்டுள்ள கூர்மையான எல்இடி ஹெட்லைட், சில வேரியண்ட்களில் வரும் ஹேண்ட்கார்டுகள் (Handguards) மற்றும் முரட்டுத்தனமான மிலிட்டரி லுக் வண்டியை மிகவும் ஸ்டைலாகக் காட்டுகிறது.

ஹோண்டா டியோ 125: இது தனது பழைய டியோ 110 மாடலின் பாரம்பரிய வடிவமைப்பைப் பின்பற்றி, அதைவிட இன்னும் கொஞ்சம் தடிமனாகவும் பிரீமியமாகவும் மாற்றப்பட்டுள்ளது. இதில் உள்ள போல்டான எல்இடி ஹெட்லேம்ப், குரோம் டிப் கொண்ட இரட்டை அடுக்கு எக்சாஸ்ட் சைலன்சர் (Dual-outlet muffler) மற்றும் கிராஃபிக்ஸ் டிசைன்கள் சாலைகளில் இதற்கு ஒரு தனி கெத்தைக் கொடுக்கின்றன.

இன்ஜின்

யமஹா ரேஇசட்ஆர் 125: இதில் உள்ள 125cc புளூ கோர் இன்ஜின் 8.2 PS பவரையும், 10.3 Nm (டார்க்) வெளிப்படுத்துகிறது. இதன் மிகப்பெரிய ஹைலைட்டே இதிலுள்ள ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் (SMG) மற்றும் ஹைபிரிட் அசிஸ்ட் தொழில்நுட்பம் தான். டிராஃபிக்கில் வண்டியை நிறுத்தி எடுக்கும் போது, பேட்டரி மூலம் கூடுதலாக 3 விநாடிகளுக்கு எலக்ட்ரிக் பவர் அசிஸ்ட் கிடைக்கிறது. இதனால் ஆரம்ப வேகம் (Initial Pick-up) மிகவும் ஸ்மூத்தாக இருக்கும்.

ஹோண்டா டியோ 125: இதில் ஹோண்டாவின் நம்பகமான 125cc eSP இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 8.28 PS பவரையும், 10.4 Nm (டார்க்) தருகிறது. இரண்டு வண்டிகளின் எண்களும் ஒரே மாதிரியாக இருந்தாலும், டியோ 125 வண்டியை ஓட்டும் போது நடுப்பகுதியில் (Mid-range Acceleration) கூடுதல் பஞ்ச் கிடைக்கிறது. இதிலும் சத்தமில்லாமல் வண்டியை ஸ்டார்ட் செய்யும் ஏசிஜி (ACG) ஸ்டார்ட்டர் சிஸ்டமும் உள்ளது.

எடை மற்றும் ஹேண்ட்லிங்

ஸ்கூட்டர் ஓட்டும் போது அதன் எடை மிகவும் முக்கியமானது, இங்குதான் யமஹா ஒரு மிகப்பெரிய கேம் சேஞ்சராக மாறுகிறது.

யமஹா ரேஇசட்ஆர் 125: இந்த ஸ்கூட்டரின் ஒட்டுமொத்த எடை வெறும் 99 கிலோ மட்டுமே! இந்த 125சிசி பிரிவிலேயே மிகக் குறைந்த எடை கொண்ட ஸ்கூட்டர் இதுதான். இதன் காரணமாகக் கடுமையான சிட்டி டிராஃபிக்கிலும், குறுகிய இடங்களிலும் வண்டியை வளைத்து நெளித்து ஓட்டுவதும், பார்க்கிங் செய்வதும் அசாத்திய எளிதாக இருக்கும்.

ஹோண்டா டியோ 125: இதன் எடை 104 கிலோ ஆகும். யமஹாவை விட 5 கிலோ கூடுதல் எடை என்றாலும், இதுவும் ஓட்டுவதற்கு எளிதாகவே இருக்கும். குறிப்பாக, ஹைவேஸில் அதிவேகமாகச் செல்லும் போது இந்த எடை வண்டிக்கு நல்ல ஸ்டெபிலிட்டியைத் தருகிறது.

மைலேஜ் விவரம்

எடை குறைவாக இருப்பதும், ஹைபிரிட் தொழில்நுட்பம் இருப்பதும் யமஹா ரேஇசட்ஆர் ஸ்கூட்டரை மைலேஜ் பந்தயத்தில் வெகுதூரம் முன்னால் கொண்டு நிறுத்துகிறது.

யமஹா ரேஇசட்ஆர் 125: சோதனை நிலவரப்படி நிறுவனம் 71.33 கி.மீ மைலேஜ் கூறும் நிலையில், நிஜ உலகச் சாலைகளில் (Real-world Mileage) சாதாரணமாக ஓட்டினால் கூட ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 50 முதல் 55 கி.மீ வரை மிகச் சிறந்த மைலேஜ் அசால்ட்டாகக் கிடைக்கிறது.

ஹோண்டா டியோ 125: ஹோண்டாவின் இன்ஜின் செட்டப் மூலம் இது நிஜ உலகச் சாலைகளில் ஒரு லிட்டருக்கு 45 முதல் 48 கி.மீ வரை நம்பகமான மற்றும் நிலையான மைலேஜை வழங்குகிறது.

விலை விபரம் (எக்ஸ்-ஷோரூம்)

  • யமஹா ரேஇசட்ஆர் 125 ஹைபிரிட்: ரூ. 79,880 முதல் ரூ. 1,00,440
  • வரைஹோண்டா டியோ 125: ரூ. 88,133 முதல் ரூ. 93,459 வரை

எந்த ஸ்கூட்டரை வாங்கலாம்?

உங்களுக்கு இந்த பிரிவிலேயே உச்சகட்ட மைலேஜ் தந்து பெட்ரோல் காசை மிச்சப்படுத்த வேண்டும் என்று நினைத்தால்.பெண்கள் மற்றும் முதியவர்கள் கூட டிராஃபிக்கில் மிக எளிதாகக் கையாளும் படி மிகக் குறைந்த எடை (99 கிலோ) கொண்ட வண்டி வேண்டும் என்றாலும், எதிர்கால ஹைபிரிட் தொழில்நுட்பமும், முரட்டுத்தனமான டிசைனும் உங்களுக்குப் பிடித்திருந்தால்.பின்வரும் காரணங்களுக்காக நீங்கள் ஹோண்டா டியோ 125-ஐத் தேர்ந்தெடுக்கலாம்.

காரில் இருப்பது போன்ற ஸ்மார்ட் கீ (Keyless entry) மற்றும் ரிமோட் வசதிகளின் சொகுசு உங்களுக்கு முக்கியம் என்றால்.இன்ஜின் மிகவும் ஸ்மூத்தாகவும், ஓட்டும் போது நல்ல பஞ்சியான பவர் மற்றும் வேகம் கிடைக்க வேண்டும் என்று விரும்பினால்.ஹோண்டா பிராண்டின் நீண்ட கால நம்பகத்தன்மை மற்றும் சிறந்த மறுவிற்பனை மதிப்பு (Resale Value) உங்களுக்குத் தேவைப்பட்டால்!

ரூ.80,000-க்குள் 55 KM மைலேஜ்! Yamaha RayZR 125 vs Honda Dio 125 எது வாங்கலாம்?