லண்டன் : லண்டனில் நடந்த பேச்சுவார்த்தையில், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான புதிய வர்த்தக ஒப்பந்தம் முடிவடைந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்திற்கு டிரம்ப் ஒப்புதல் அளித்த பிறகு, ஒப்பந்தத்தை இறுதி செய்ய சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் ஒப்புதல் காத்திருக்கிறது. ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, சீனா அமெரிக்காவுக்கு காந்தங்கள், அரிதான தனிமங்களை வழங்கும் என்றும், சீன மாணவர்களுக்கான விசாக்களை அமெரிக்கா அனுமதிக்கும் என்றும் ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தை சீன அதிபரும், தானும் […]
நோஜென்ட் : பிரான்ஸ் நாட்டில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை தடுக்க விரைவில் சட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இதற்கான விதிகள் விரைவில் அமல்படுத்தப்படும் என அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார். வரும் மாதங்களில் ஐரோப்பிய ஒன்றியம் (EU) இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், பிரான்சே இந்த திசையில் கடுமையான சட்டங்களை இயற்றும் என்று அவர் கூறினார். கிழக்கு பிரான்சின் நோஜென்ட் நகரத்தில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளியில் 14 வயது […]
வாஷிங்டன் : அமெரிக் அதிபர் டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல் போக்கு, தற்பொழுது முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. அதாவது, ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த மஸ்க், ட்ரம்பை கடுமையாக விமர்சித்தார். இதற்கு பதிலடியாக ட்ரம்பும் மஸ்க்கை கடுமையாக விமர்சித்ததால், இருவருக்கும் இடையே மோதல் தீவிரமடைந்தது. இதனை தொடர்ந்து, மஸ்க்குடனான உறவு முற்றிலும் முறிந்துவிட்டதாகவும், இனி அவருடன் பேச விரும்பவில்லை என்றும் ட்ரம்ப் திட்டவட்டமாக அறிவித்தார். […]
லாஸ் வேகாஸ் : அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் டிரம்ப் அரசின் நடவடிக்கைக்கு எதிராக, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மக்கள் போராட்டம் வலுத்து வருகிறது. அதிகரித்து வரும் அமைதியின்மையைத் தொடர்ந்து, லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ் இரவு நேர ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். இந்த நிலையில், டிக்டாக் பிரபலம் காபி லேம், விசா காலத்தையும் தாண்டி அமெரிக்காவில் தங்கி இருந்ததாக லாஸ் வேகாஸில் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க (ICE) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பிறகு […]
லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் டிரம்ப் அரசின் நடவடிக்கைக்கு எதிராக, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மக்கள் போராட்டம் வலுத்து வருகிறது. அங்கு போராட்டத்தில் ஈடுபடுவோர் இரவு நேரங்களில் கடைகளை கொள்ளையடிக்கும் சம்பவத்தில் ஈடுபடுவதாலும், அதிகரித்து வரும் அமைதியின்மையைத் தொடர்ந்து, லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ் இரவு நேர ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணிக்கு தொடங்கி (புதன்கிழமை) காலை 6 மணிக்கு முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாசவேலைகளைத் […]
ஃபுளோரிடா : இந்தியாவை சேர்ந்த சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேரை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அழைத்து செல்லும் ஆக்சியம்-4 திட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதாவது, இறுதிக்கட்ட சோதனையின்போது ஃபால்கன் 9 ராக்கெட்டின் உந்துவிசை அமைப்பில் கசிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. ஸ்பேஸ்எக்ஸ் குழுக்கள், LOx கசிவை சரிசெய்யும் வகையில், Ax-4 பணிக்காக நாளை ஃபால்கன் 9 ராக்கெட் ஏவப்படுவது ஒத்திவைக்கப்படுவதாகவும், பழுதுபார்ப்பு பணிகள் மற்றும் விண்வெளி தூரம் கிடைப்பதைப் பொறுத்து புதிய ஏவுதள தேதி பகிரப்படும் என்றும் […]
மெரிட் தீவு : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, ஆக்ஸியம் மிஷன் 4 (Ax-4) இன் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நாளை செல்லவிருக்கிறார். முன்னதாக இவர் மே மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில், அதன்பிறகு ஜூன் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக ஏவுதல் ஜூன் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்றும் நடைபெறவிருந்த மோசமான வானிலை காரணமாக அதன் ஏவுதல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட […]
கொரியா : BTS உறுப்பினர்களான (பாடகர்கள்) RM (கிம் நம்-ஜூன்) மற்றும் V (கிம் டே-ஹியுங்) ஆகியோர் தென் கொரியாவின் கட்டாய இராணுவ சேவையை முடித்துவிட்டு இன்று (ஜூன் 10) வீடு திரும்பியுள்ளனர். ஆர்.எம் மற்றும் வி ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், இருவரும் முதல் முறையாக பத்திரிகையாளர்கள் முன் தோன்றினர். தென் கொரியாவில், 18 முதல் 35 வயதுடைய ஆண்கள் அனைவரும் சுமார் 18-21 மாதங்கள் இராணுவ சேவை செய்ய வேண்டும் என்ற சட்டம் உள்ளது. […]
லாஸ் ஏஞ்சல்ஸ் : அதிபர் டொனால்ட் டிரம்ப், 2025-ஆம் ஆண்டு தனது இரண்டாவது பதவிக் காலத்தில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிப்பவர்களை விரைவாக நாடு கடத்துவதற்கு, குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு (ICE) அதிகாரிகளுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டது. அந்த உத்தரவின்படி, லாஸ் ஏஞ்சல்ஸில் ICE அதிகாரிகள் பெரிய அளவிலான சோதனைகளை நடத்தினர். இதில், வீடுகள், பணியிடங்கள் மற்றும் பொது இடங்களில் புலம்பெயர்ந்தோரை கைது செய்து, ஆவணங்கள் இல்லாதவர்களை உடனடியாக நாடு கடத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த […]
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்புக்கு முழு ஆதரவு அளித்த தொழிலதிபர் எலான் மஸ்க், ட்ரம்ப் மீண்டும் அதிபரான பிறகு அரசு செலவுகளைக் குறைக்க உருவாக்கப்பட்ட துறையை மேற்பார்வையிட்டார். ஆனால், சமீபத்தில் தயாரான அமெரிக்க அரசின் பட்ஜெட்டில் மஸ்க்கின் குழு பரிந்துரைத்த எந்தவொரு மாற்றமும் ஏற்கப்படவில்லை. வரிச் சலுகைகள், ராணுவ செலவுகளுக்கு கூடுதல் நிதி, மின்சார வாகன மானியம் ரத்து போன்றவை மஸ்க்கை அதிருப்தி அடையச் செய்தன. இதனால், ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக […]
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல், அரசியல் மற்றும் வணிக உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் மாறி மாறி வார்த்தை போரில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட முக்கியமான காரணமே ட்ரம்ப் கொண்டு வந்த “One Big Beautiful Bill” என்ற பொருளாதார மசோதா தான். டிரம்ப் இந்த மசோதாவை கொண்டுவந்தவுடனே இந்த மசோதாவில் பெரிய அளவிலான […]
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாகி எலன் மஸ்க் இடையே ஏற்பட்ட வார்த்தை மோதல் என்பது நாளுக்கு நாள் மேலும் தீவிரமடைந்து வருகிறது. டிரம்பின் வரி குறைப்பு மற்றும் செலவு மசோதாவுக்கு எதிராக மஸ்க் கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததைத் தொடர்ந்து, இந்த மோதல் உருவாகியுள்ளது. “One Big Beautiful Bill” என்ற பொருளாதார மசோதவை குடியரசுக் கட்சியின் ஆதரவுடன் ஹவுஸில் நிறைவேற்றப்பட்டது. இது பொருளாதாரத்திற்கு அதிக கடன் சுமையை ஏற்படுத்தும் என்று […]
லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலோன் மஸ்க் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், ஜனாதிபதி டிரம்ப் தனது சிறப்பு சிவப்பு டெஸ்லா காரை விற்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டதன் எதிரொலியாக மார்ச் மாதம் வாங்கிய தனது டெஸ்லா சிவப்பு காரை டிரம்ப் இனி பயன்படுத்த மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. […]
வாசிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல், அரசியல் மற்றும் வணிக உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் மிகப்பெரிய வெடிகுண்டைத் தூக்கிப் போட வேண்டிய நேரம் வந்துவிட்டது. டொனால்ட் டிரம்ப் எப்ஸ்டீன் கோப்புகளில் இருக்கிறார். அதனால்தான் அதை வெளியிட மறுக்கிறார். உண்மை ஒருநாள் வெளிவரும் என்று எலான் மஸ்க் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். சிறார்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகக் […]
காசா : இஸ்ரேல்-ஹமாஸ் போரால் பாதிக்கப்பட்ட காஸாவில் உணவுப் பற்றாக்குறை மற்றும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, இந்தியாவில் ரூ.5 மதிப்புள்ள பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் சுமார் ரூ.2,500 (24 யூரோ) என்ற விலையில் விற்பனை செய்யப்படுவதாக ஒரு துயரமான செய்தி வெளியாகியுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கிய 2023 அக்டோபர் முதல், காஸாவில் உணவு, மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு வாழும் மக்கள் அன்றாட உணவு தேவைகளைப் பூர்த்தி செய்ய […]
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல், அரசியல் மற்றும் வணிக உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட முக்கியமான காரணமே ட்ரம்ப் கொண்டு வந்த One Big Beautiful Bill என்ற பொருளாதார மசோதா தான். டிரம்ப் இந்த மசோதாவை கொண்டுவந்தவுடனே இந்த மசோதாவில் பெரிய அளவிலான வரிக் குறைப்புகள் இருந்தன, ஆனால் இதனால் நாட்டின் […]
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகி எலான் மஸ்க் இடையேயான நட்பில் விரிசல் ஏற்பட்டது பேசுபொருளாக வெடித்துள்ளது. 2024 ஜனாதிபதி தேர்தலில் மஸ்க், டிரம்பின் பிரச்சாரத்துக்கு 250 மில்லியன் டாலர்களுக்கு மேல் நிதியுதவி செய்து, அவரது வெற்றிக்கு பெரிதும் உதவினார். ஆனால், இப்போது டிரம்ப், மஸ்க்குடன் பேச விருப்பமில்லை என்றும், அவரது நிறுவனங்களுக்கு அரசு ஒப்பந்தங்களை ரத்து செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையேயான […]
டெல்லி : வங்கிக் கடன் மோசடி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளின் கீழ் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக உள்ள விஜய் மல்லையாவை ராஜ் ஷாமானி என்பவர் நேரடியாக சந்தித்து பேட்டி எடுத்து தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஒன்பது வருடங்களாக ஊடகங்களில் இருந்து விலகி இருந்த மல்லையா, இந்த பேட்டியில் தன் தரப்பு வாதங்களை முன்வைத்துள்ளார். அந்த பேட்டியில் அவர் தனது வாழ்க்கை, வணிகம், கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸின் சரிவு, ஊழியர்களின் நிலுவையில் உள்ள சம்பளம் மற்றும் சட்டப் போராட்டங்கள் […]
வாஷிங்டன் : அமெரிக்காவில் புதிய வரிக்குறைப்பு மசோதா விவகாரத்தில் அதிபர் ட்ரம்ப் மற்றும் தொழிலதிபர் எலான் மஸ்க் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. 2024 ஜனாதிபதித் தேர்தலில் மஸ்க் டிரம்பை வெளிப்படையாக ஆதரித்து வந்தார். மஸ்க் தனது சமூக ஊடக தளம் மூலம் டிரம்பிற்கு ஆதரவாக ஒரு பெரிய பிரச்சாரத்தை நடத்தினார் மற்றும் பொது பேரணிகளில் கலந்து கொண்டார். இதற்காக மஸ்க்கிற்கு வெகுமதியும் வழங்கப்பட்டது மற்றும் அவருக்கு DOGE பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால் பின்னர் டிரம்பின் லட்சியமான […]
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்,ஒரு உத்தரவு மூலம் சில நாடுகளுக்கு அமெரிக்காவுக்குள் வர தடையும், சில நாடுகளுக்கு கட்டுப்பாடுகளும் விதித்தார். இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் இந்தப் பட்டியலில் உள்ளது. இந்தத் தடைகள், அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கவும் விதிக்கப்பட்டவை. எந்தெந்த நாடுகள் இருக்கிறது என்பது பற்றி பார்ப்போம். முழுமையான தடை உள்ள நாடுகள் (சிவப்பு பட்டியல்) ழுமையான பயணத் தடை (Red List) விதிக்கப்பட்ட 12 நாடுகள் ஆப்கானிஸ்தான், […]