#BREAKING :தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு.!

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில்

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை சரிவை கண்டு வந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.45,040-க்கு விற்பனை. கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.5,630-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசுகள் உயர்ந்து 80.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.