சென்னை :கடந்த சில நாள்களாக வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வந்த தங்கம் விலை, இன்று சற்று குறைந்துள்ளது. சவரன் ரூ.59,000ஐ நெருங்கிய நிலையில், சற்று விலை குறைந்தது நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு சிறிய ஆறுதல் தந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, (24-10-2024) சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ஒரு சவரன் ரூ.58,280க்கும், கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.7,285க்கும் விற்பனையாகிறது.
unknown nodetoday gold price [File Image]அதே நேரம், 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.62,920-க்கும், கிராமுக்கு ரூ.7,740 ஆகவும் விற்பனையாகிறது.
மேலும், வெள்ளியின் விலை கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து 110 ரூபாய்க்கும், ஒரு கிலோவுக்கு 1,10,000. க்கும் விற்பனையாகிறது.
