எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த , வகையில் கடந்த சில நாட்களாகவே விலை கடுமையாக உயர்ந்து விற்பனை ஆகி வருகிறது.
தங்கம் விலை
unknown node[Image Source : Dinasuvadu]
இன்றயை நிலவரப்படி, இன்று சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,450-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு சவரன் ரூ.43,600-க்கு விற்பனையாகிறது. கடந்த 8 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,360 ரூபாய் உயர்ந்துள்ளது.
வெள்ளி விலை:
unknown nodeசென்னையில் வெள்ளியின் விலை, கிராமுக்கு ரூ.40 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.73.10 க்கு, விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.400 அதிகரித்து ரூ.73,100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.