அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்தது.
எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர், தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு.
unknown nodeஅந்த வகையில், இன்று தங்கம் விலை, சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில், தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.44,840க்கும், கிராமுக்கு ரூ.60 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.5,605-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரை, 90 காசுகள் குறைந்து ரூ.80.40-க்கு விற்பனை விற்பனையாகிறது.
unknown nodeநேற்றைய நிலவரப்படி, தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.5,565க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.45,320க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
அட்சய திருதியை:
அட்சய திருதியை நாளில் தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் வாங்கினால் தொடர்ந்து வீட்டில் செல்வம் வளம் பெரும், நிறைய தங்கம் வாங்கும் யோகம் கிடைத்து தங்கம் சேரும் என்பது நம்பிக்கை.
unknown nodeஅந்த வகையில், அட்சய திருதியை முன்னிட்டு, இன்று முன்கூட்டியே தங்கத்தின் விலையை மாற்றி அமைத்த வணிகர்கள். எப்போதும், தங்கவிலை 9 மணிக்கு மேல் நிர்ணயித்து வந்த நிலையில், அட்சய திருதியை முன்னிட்டு இன்று காலை 7.29க்கு விலையை மாற்றி அமைத்துள்ளனர்.