தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு… இன்றைய நிலவரம் இதோ.!
24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையை பொறுத்தவரையில், கிராம் ரூ.8,749-க்கும், ஒரு சவரன் ரூ.69,992-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை : கடந்த வாரம் உச்சமடைந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.
வார தொடக்க நாளான நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து விற்பனையான நிலையில், இன்றைய தினம் சற்று குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் சிறிது மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.64,160-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.8,020-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையை பொறுத்தவரையில், கிராம் ரூ.8,749-க்கும், ஒரு சவரன் ரூ.69,992-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.107-க்கும், கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.1,07,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.