சென்னை :தொடர்ந்து 3வது நாளாக இன்றும் குறைந்தது ஆபரணத் தங்கத்தின் விலை, கடந்த 2 நாட்களாகச் சவரனுக்கு ரூ.250 வீதம் குறைந்துவந்த நிலையில், இன்று மேலும் ரூ.200 குறைந்துள்ளது.
அதன்படி, இன்றைய நிலவரப்படி (19.09.2024) சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.54,600க்கும், கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.6,825க்கும் விற்பனையாகிறது.
unknown nodetoday gold price [file image]அதே நேரம், 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 58,240 ஆகவும், கிராமுக்கு ரூ.7,280 ஆகவும் விற்பனையாகிறது.
அதேசமயம் சில்லறை விற்பனையில் வெள்ளி விலை மாற்றமின்றி, கிராமுக்கு ரூ.96க்கும், கிலோவுக்கு ரூ.96,000க்கும் விற்கப்படுகிறது.
