சென்னை :வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உயர்ந்து புதிய உச்சம் தொட்டு வருகிறது. நேற்றைய தினம், சவரனுக்கு ரூ.480 உயர்ந்த நிலையில், இன்று மேலும் ரூ.520 உயர்ந்து நடுத்தர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,440க்கு விற்பனையாகிறது ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.59,520க்கு விற்பனையாகிறது.
unknown nodetoday gold price [File image]அதே நேரம், 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.63,560-க்கும், கிராமுக்கு ரூ.7,945 ஆகவும் விற்பனையாகிறது.
மேலும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ரூ.1 ருபாய் உயர்ந்து கிராம் ரூ.109-க்கும், ஒரு கிலோ ரூ.1,09,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
