சென்னை :கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று திடீரென உச்சம் தொட்டுள்ளது. இதன் காரணமாக இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.
அதன்படி, சென்னையில் இன்றைய நிலவரப்படி (06.09.2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.53,760-க்கும், கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.6,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
unknown nodegold price [file image]அதே நேரம், 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 57,400 ஆகவும், கிராமுக்கு ரூ.7,175 ஆகவும் விற்பனையாகிறது. அதே போல், வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்து ஒரு கிராமுக்கு ரூ.920.00க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.92,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
