படிப்படியாக உயரும் தங்கம், வெள்ளி விலை ..! இன்றைய நிலவரம் என்ன ?

தங்கம் விலை : ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. கடந்த 23ம் தேதி நடைபெற்ற மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி

Gold Price - Image is Generated by Meta AI

தங்கம் விலை :ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. கடந்த 23ம் தேதி நடைபெற்ற மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி இறக்குமதி வரி குறைப்பு காரணமாக தங்கத்தின் விலை குறைந்து விற்கப்பட்டது. இந்நிலையில், வாரத்தின் முதல் இரண்டு நாளில் குறைந்த தங்கம் விலையானது நேற்றும், இன்றும்  உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்றைய நிலவரப்படி (01-08-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.51,440-க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ. 6,430-க்கும் விற்பனையாகிறது. அதே போல், வெள்ளியின் விலை கிராமுக்கு 70 காசு உயர்ந்து ரூ.91.70-க்கும், கிலோவிற்கு ரூ.700 உயர்ந்து ரூ.91,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் நேற்றைய நிலவரப்படி (31-07-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூ.51,360-க்கும், கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.6,420-க்கும் விற்பனையானது. அதே நேரம், வெள்ளி விலை கிராமுக்கு  ரூ.91-க்கு விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.