சென்னை :கடந்த 2 வாரங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இதனால் தங்கம் வாங்குவோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதன்படி, சென்னையில் இன்று (19 -11-2024) 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.56,520க்கும், கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.7,065க்கும் விற்பனையாகிறது.
unknown nodetoday gold price [File Image]அதேபோல், வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.101க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.2,000 உயர்ந்து ரூ.1,01,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60,560-க்கும், ஒரு கிராம் ரூ.7,570-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
