மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை !! இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ !!

Gold Price: சென்னையில் தங்கம் விலை இன்று வரலாறு காணாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது.

Gold Price [file image]

Gold Price:சென்னையில் தங்கம் விலை இன்று வரலாறு காணாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது.

சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, தங்கத்தின் விலையும் உயர்கிறது.

இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு கொண்டே வருகிறது. அதன்படி, இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம். கடந்த சில நாட்களில் தங்கம் விலையானது வரலாறு காணாத அளவிற்கு உச்சம் தொட்ட நிலையில், வாரத்தின் முதல் நாள் சற்று சரிவை சந்தித்தது தற்போது இன்றைய நாளில் மீண்டும் தங்கம் விளையானது உச்சம் தொட்டுள்ளது.

சென்னையில் இன்றைய நிலவரப்படி (16-04-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.640 உயர்ந்து ரூ.54,960-க்கும், கிராமுக்கு ரூ.80 உயர்ந்து  ரூ.6,870-க்கும் விற்பனையாகிறது. அதே நேரம் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.90.50-க்கும், கிலோ ரூ.1000 அதிகரித்து ரூ.90,500-க்கும் விற்பனையாகிறது.

சென்னையில் இன்றைய நிலவரப்படி (15-04-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.520 குறைந்து ரூ.54,320க்கும், கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.6,790க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதே நேரம் வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.89.50க்கும், கிலோ வெள்ளி ரூ.89,500க்கும் விற்பனையானது.