சென்னை :தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இன்று ஒரே சவரனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது, இதனால்ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காண உச்சத்தை மீண்டும் தொட்டுள்ளது. அதாவது, ஒரு கிராமுக்கு ரூ.8 ஆயிரத்தை கடந்தது.
அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.20) சவரனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது. இதனால்,வரலாறு காணாத புதிய உச்சமாக 22 கேரட் ஒரு கிராம் ரூ.8,070க்கும், சவரன் ரூ.64,560க்கும் விற்பனையாகிறது.
unknown nodetoday gold price [File Image]அதேபோல், வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.109க்கும், பார் வெள்ளி கிலோ ரூ.1,09,000க்கும் விற்பனையாகிறது.
மேலும், 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையை பொறுத்தவரையில், கிராம் ரூ.8,803-க்கும், ஒரு சவரன் ரூ.70,424-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
