சென்னை :தங்கம் விலை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.60,000ஐ நெருங்கிய நிலையில். சமீப நாட்களாக ஆறுதல் தெரிவிக்கும் விதமாக நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இன்று, இதுவரை இல்லாத அளவிற்கு 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்துள்ளது. இதன் காரணமாக நகை வாங்கும் நகை பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.
இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.165 குறைந்து ரூ.7,200-க்கும் சவரனுக்கு ரூ.1,320 குறைந்து ரூ.57,600-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதைப்போல 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 7,705-க்கும் சவரனுக்கு ரூ. 61,640-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.102.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.1,02,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
unknown nodegold price 07.11.2024 [File Image]
