#GoldPrice:இல்லத்தரசிகள் ஷாக்...தங்கம் விலை கிடுகிடுவென உயர்வு!

சென்னை:இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது.

சென்னை:இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது.

பொதுவாக பெண்கள் மிகவும் விரும்பி அணியும் பொருட்களில் தங்க நகைகள்தான் முதலிடம் வகிக்கும்.மேலும்,ஏதாவது முதலீடாக இருந்தாலும் தங்கத்தில்தான் பெரும்பாலான பெண்கள் முதலீடு செய்வார்கள்.இதனால்,தங்கத்தின் விலையை பெண்கள் சற்று உற்று நோக்குவதுண்டு.

இந்நிலையில்,இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சிதரும் வகையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.39,896-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைப்போல, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது.இதனால்,ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,987-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும்,ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.10 அதிகரித்து,கிராம் ரூ.73.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.