கூகுள் இந்தியாவின் மேலாண் இயக்குநர் ராஜன் ஆனந்தன் பெண்கள் நடத்தும் நிறுவனங்களில் நிர்வாகச் செயல்பாடு சிறப்பாக உள்ளதாகக் தெரிவித்துள்ளார்.
பெண்களின் நிர்வாகத் திறன் குறித்த கருத்தரங்கில் கூகுள் இந்தியா மேலாண் இயக்குநர் ராஜன் ஆனந்தன் பேசினார். அப்போது பெண்கள் குறைவாகப் பேசுவதுடன் தங்கள் திட்டங்களைச் செயல்படுத்துவதிலேயே குறியாக இருப்பதாகத் தெரிவித்தார்.
நிறுவனத்தைக் கட்டமைப்பதிலும் தனக்குக் கீழான குழுவை உருவாக்குவதிலும் பெண்கள் நிறையக் கவனம் செலுத்துகிறார்கள் என்றும் தெரிவித்தார். பெண்களால் தொடங்கப்படும் நிறுவனங்களின் எண்ணிக்கையும், பெண்களால் நடத்தப்படும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் போதுமான அளவில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.