10 நாட்களுக்கு பிறகு குறைந்த முட்டை விலை..! இன்றைய நிலவரம் இதோ.!!

Today, the purchase price of an egg in the Namakkal region has dropped by 30 rupees to 3.90 rupees.

இன்று நாமக்கல் மண்டலத்தில் ஒரு முட்டையின் பண்ணைகொள்முதல் 30 காசுகள் குறைந்து 3.90 காசுகளாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் தான். கிட்டத்தட்ட 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து விற்பனை செய்யப்பட்டது. அதற்கு பிறகு முட்டை விலை ஏற்றம் மற்றும் இறக்கத்தை கண்டு வருகிறது.

இந்த நிலையில், தேசிய முட்டை ஒருங்கிணைப்ப உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் முட்டையின் விலையை 30 காசுகள் முடிவு குறைக்க செய்தனர். அதன்படி, இன்று நாமக்கல் மண்டலத்தில் ஒரு முட்டையின் பண்ணைகொள்முதல் 3.90 காசுக்கு விற்பனை.  மேலும் கடந்த 1 ஆம் தேதி விற்பனை செய்யப்பட்ட விலையிலிருந்து மாற்றம் செய்யப்படாமல் 4.20 காசுகளாக விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டை விலை 10 நாட்களுக்கு பிறகு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.