திடீரென உயர்ந்த தங்கம் விலை...இன்றைய விலை நிலவரம் இதோ..!

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதஹலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே,

gold

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதஹலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.

பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை சரிந்து வந்த நிலையில், வார தொடக்கத்தின் இரண்டாம் நாளான இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது.

(10.10.2023) இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. இதனால், நேற்று சவரன் ரூ.42,920க்கு விற்பனை ஆன தங்கம், இன்று ரூ.43,040க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்று ரூ.5,380ஆக உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் உயர்ந்து 75.50க்கும், கிலோ வெள்ளி ரூ.75,500க்கும் விற்கப்படுகிறது.

(09.10.2023)நேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.42,920க்கும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ. 5,365க்கும் விற்பனையானது. மேலும், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 உயர்ந்து ரூ.75.50 க்கும், கிலோ வெள்ளி ரூ.75,500க்கும் விற்பனை செய்யப்பட்டது.