அதிரடியாக குறைந்தது தங்கம் விலை! இன்றைய நிலவரம் இதோ...

பொதுவாகவே இன்று பெரும்பாலானோர் தங்களது சேமிப்பை தங்கத்தில் தான் முதலீடு செய்வதுண்டு. இதானால் மக்கள் தங்கம் விலையில் ஏற்படக் கூடிய மாற்றத்தை தினமும்

gold-jewellery

பொதுவாகவே இன்று பெரும்பாலானோர் தங்களது சேமிப்பை தங்கத்தில் தான் முதலீடு செய்வதுண்டு. இதானால் மக்கள் தங்கம் விலையில் ஏற்படக் கூடிய மாற்றத்தை தினமும் உருகவனிப்பதுண்டு. இத்தகைய தங்கம் விலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம் இறக்கம் கண்டுவந்த நிலையில், நேற்றும் இன்றும் தொடர்ந்து குறைந்து உள்ளது.

இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.150 குறைந்து ரூ.44,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல ஒரு கிராமுக்கு ரூ.15 குறைந்து, ரூ.5,505-க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை ரூ.1.40 குறைந்து கிராமுக்கு ரூ.77.60க்கும், கிலோ ரூ.77,600க்கும் விற்கப்படுகிறது.

நேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 குறைந்து, ரூ.44,160-க்கு விற்பனை ஆனது. அதுபோல ஒரு கிராமுக்கு ரூ.1 குறைந்து, ரூ.5,520-க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை 30 காசுகள் குறைந்து கிராம் ரூ. 79க்கும், கிலோ ரூ. 79,000க்கும் விற்பனை செயற்பட்டது.

கடந்த 5 நாட்களாக ஏற்றம், இறக்கம் கண்ட தங்கம் விலையின் பட்டியல்:

தூயத் தங்கம் (24 கி)                                   1 grm       8 grm

2023 செப்டம்பர் 26ம் தேதி அன்று – 5,975       47,800

2023 செப்டம்பர் 25ம் தேதி அன்று – 5,990       47,920

2023 செப்டம்பர் 24ம் தேதி அன்று – 5,991       47,928

2023 செப்டம்பர் 23ம் தேதி அன்று – 5,991       47,928

2023 செப்டம்பர் 22ம் தேதி அன்று – 5,980       47,840

ஆபரணத் தங்கம் (22 கி)                          1 grm       8 grm

2023 செப்டம்பர் 26ம் தேதி அன்று – 5,505       44,040

2023 செப்டம்பர் 25ம் தேதி அன்று – 5,520       44,160

2023 செப்டம்பர் 24ம் தேதி அன்று – 5,521       44,168

2023 செப்டம்பர் 23ம் தேதி அன்று – 5,521       44,168

2023 செப்டம்பர் 22ம் தேதி அன்று – 5,510       44,080

மாநில வாரியாக இன்றயை நிலவரம் (2023 செப்டம்பர் 26ம் தேதி)

மாநிலம்                தூயத் தங்கம் (24 கி) 1gm     ஆபரணத் தங்கம் (22 கி) 1 grm

டெல்லி                             5,988                                    5490

புனே                                  5,973                                    5,475

மும்பை                            5,973                                    5,475

ஹைதராபாத்               5,973                                    5,475

கொல்கத்தா                  5,973                                    5,475

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை! இன்றைய நிலவரம் இதோ...