பட்ஜெட் 2023இல் குறிப்பிடப்பட்ட வருமான வரி விலக்கு.. வரி கணக்கிடும் முறை... கால அவகாச விவரங்கள்....

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த பட்ஜெட் 2023இல் குறிப்பிடப்பட்ட வருமான வரி விலக்கு, வருமான வரி கணக்கிடும் முறை, வருமான வரி தாக்கல்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த பட்ஜெட் 2023இல் குறிப்பிடப்பட்ட வருமான வரி விலக்கு, வருமான வரி கணக்கிடும் முறை, வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாச விவரங்கள் குறித்து இந்த குறிப்பில் பார்க்கலாம்.

பாராளுமன்றத்தில் இன்று  2023-24க்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.  நேற்று ஜனாதிபதி உரையுடன் தொடங்கிய நாடாளுமன்றத்தில். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து இன்று மத்திய பட்ஜெட் உரையை இன்று வாசித்தார். அதில் பல்வேறு திட்டங்கள் குறித்தும் , அதற்காக ஒதுக்கப்படும் நிதியினை பற்றியும் அறிவித்தார்.

இந்த பட்ஜெட்டில் அனைவரும் எதிர்பார்த்தது போல, வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்த்த நிலையில் அதற்கான அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது.  புதிய வரிமுறையில் வரி செலுத்தி வருவோருக்கு ஆண்டு வருமான உச்சவரம்பு 5 லட்சமாக இருந்த ஆண்டு வருமான உச்ச வரம்பு தற்போது 7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த வருமான வரி உச்சவரம்பு விவரங்கள் குறித்து, 2023 பட்ஜெட்டில்  நிர்மலா சீதாராமன் அறிவித்த வருமான வரி விதியின் முக்யமான 5 மாற்றங்கள் பற்றி பார்க்கலாம். முதலில், வரி விலக்கு வரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டது. 7 லட்சத்திற்கு மேல் வருமானம் இருந்தால் 3 லட்சத்தில் இருந்து புதிய வருமான வரி விதிமுறை மூலம் கணக்கிட்டு வருமான வரியை செலுத்த வேண்டும்.

அடுத்ததாக, வருமான வரி விகிதங்களில் தற்போது புதியதாக ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்னவென்றால். வருமான வரி உச்சவரம்பு 2.5 லட்சத்தில் இருந்து 3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 3 லட்சம் வரையில் வருமானம் பெறுவோர் வரி செலுத்த தேவையல்லை.

அடுத்ததாக, 3 லட்ச ரூபாய் முதல் 6 லட்ச ரூபாய் வரையில்  5 சதவீதம் வரி செலுத்த வேண்டும் எனவும், 6 லட்ச ரூபாய் முதல் 9 லட்ச ரூபாய் வரையில்  10 சதவீதம் வரி செலுத்த வேண்டும் எனவும் 9 லட்ச ரூபாய் முதல் 12 லட்ச ரூபாய் வரையில்  15 சதவீதம் வரி செலுத்த வேண்டும் எனவும், 12 லட்ச ரூபாய் முதல் 15 லட்ச ரூபாய் வரையில்  20 சதவீதம் வரி செலுத்த வேண்டும் எனவும்,  15 லட்ச ரூபாய்க்கு மேல் 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும் எனவும் வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய வரி விதிப்பின் கீழ் வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து,  மேலும் அதிகபட்ச விளிம்பு விகிதமானது 42.74 சதவீதத்தில் இருந்து  39% ஆக குறைகிறது. ஆண்டு வருமானம் 9 லட்சம் கொண்ட ஒரு தனிநபர் 45,000 மட்டுமே வாரியாக செலுத்தும் நிலை உருவாகியுள்ளது. அடுத்ததாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் 93 நாட்களில் இருந்து தற்போது 16 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது எனவும் பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.