இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி...தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு...!

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில்

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் கடந்த 5 நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் இன்று சற்று உயர்ந்துள்ளது.

அதன்படி, இன்று  சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து   ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ5,290-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.320 உயர்ந்து  ஒரு சவரன் ரூ.42,320-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் வெள்ளியின் விலை, கிராமுக்கு ரூ.60 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.71.00-க்கு, விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 5 நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், இன்று அதிரடியாக உயர்ந்துள்ளதால் நகை வாங்கும் இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியில் உள்ளனர்.