சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.இந்த சூழலில்,பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும்,டீசல் மீதான லிட்டருக்கு 6 ரூபாயும் குறைத்து மத்திய அரசு குறைத்து.
இதனைத் தொடர்ந்து,மத்திய அரசு கலால் வரியை குறைத்ததன் மூலம் தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8.22-ம்,டீசல் லிட்டருக்கு ரூ.6.70-ம் குறைக்கப்பட்டது.இந்நிலையில்,சென்னையில் 6-வது நாளாக எந்த மாற்றமுமின்றி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
எஸ்எம்எஸ் மூலம் பெட்ரோல்,டீசல் விலை:
தினசரி பெட்ரோல் டீசலின் விலையை எஸ்எம்எஸ் மூலம் தெரிந்து கொள்ளலாம்.அதன்படி,இந்தியன் ஆயில் வாடிக்கையாளர்கள் RSP
ரூ.30 உயர்வு:
இதனிடையே,அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள சாமானியர்களுக்கு தற்போது பெரிய அடியாக பெட்ரோல் விலை ரூ.30 உயர்த்தப்பட்டுள்ளது.பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.இந்த உயர்வுக்குப் பிறகு,பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 179.85 (தோராயமாக ரூ. 180), டீசல் ரூ. 174.15 க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.