காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை போட்டியின்றி தேர்வான ராகுல்காந்தி தனது பரப்புரையில் பாஜகவை கடுமையாக தாக்கி பேசினார். காங்கிரஸ் தலைவர்கள் பேசியதை தொடர்ந்து பேசிய ராகுல்காந்தி பா.ஜனதாவை ஆவேசமாக தாக்கி பேசினார், அவர் பேசியதாவது, ‘பாஜக அரசு தனக்காக மட்டுமே போராடுகிறது. ஆனால் காங்கிரஸ் நாட்டு மக்கள் அனைவருக்கும் சேர்த்து போராடுகிறது. நாட்டின் அனைத்து மூலையிலும் உள்ள மக்களின் விருப்பங்களை அறிந்து செயல்படும் கருவியாக நான் இருக்கவே விரும்புகிறேன். பாஜக நாட்டில் வெறுப்பு அரசியல் மற்றும் மதவாதத்தையும் பரப்பி […]
காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தி.மு.க. சார்பில் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களின் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வார் என்றும், மதசார்பின்மை, சோஷியலிசம் மற்றும் கூட்டாட்சி ஆகியவற்றின் பெருமைகளை மீட்டெடுப்பார் என்றும் நம்புகிறேன்.இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு கூறியுள்ளார். I congratulate Thiru. Rahul Gandhi on his elevation […]
ஆதாரை பயன்படுத்தி சிம் கார்ட் வழங்க ஏர்டெல்லுக்கு இடைக்கால தடை விதித்தது மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் சிம் கார்டுக்கு அளிக்கப்பட்ட ஆதார் தகவலை பயன்படுத்தி ஏர்டெல் பேமெண்ட் வங்கி கணக்கு தொடங்கியதால் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) நடவடிக்கை எடுத்ததாகவும் கூறுகிறது மத்திய அரசு.. ஆனால் அம்பானியின் ஜியோ இம்மாதிரியான முறையில் தான் வாடிக்கையாளரிடம் இருந்து ஆதார் தகவல்களை பெற்றுக்கொண்டு சிம் கார்ட்களை வழங்கின என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நாளை முன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற இருக்கும் இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த நட்சத்திர வீரர் தவான், இந்திய கடைசி ஒருநாள் போட்டியில் கண்டிப்பாக சிறப்பாக விளையாடுவோம். எங்கள் அணியில் இருக்கும் பலத்தை வைத்து, இந்த உலகில் எந்த ஒரு அணியையும் எதிர்கொண்டு வெற்றி காண முடியும் என்று அவர் கூறினார்.
ஆபாச படங்களில் நடிக்கும் நடிகையான சன்னிலியோன் தற்போது அதுமாதிரியான படங்களில் நடிப்பதை கைவிட்டு விட்டு இப்போது இந்தி படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.இதனால் இந்தியாவில் அவருகேன்றே ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது.இவர் ‘வடகறி’ என்ற தமிழ் படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார். தற்போது இன்னொரு தமிழ் படத்தில் கதாநாயகியாக நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். புத்தாண்டு தினத்தையொட்டி வருகிற 31-ந் தேதி இரவு பெங்களூருவில் சன்னிலியோனின் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் […]
இந்திய காங்கிரஸ் தலைவாராக ராகுல் காந்தி இன்று முறைப்படி தலைவராக பொறுப்பேற்றார். காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று பதவியேற்றார். ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் 87வது தலைவராவார். கட்சியின் தலைவர் பொறுப்பை குறிக்கும் சான்றிதழை முல்லப்பள்ளி ராமச்சந்திரன் வழங்கினார். இந்த விழாவில் சோனியாகாந்தி, மன்மோகன்சிங் ஆகிய முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் தற்போது ஒரு பயங்கரவாதி கன்னிவெடியில் சிக்கி உயிரிழந்துள்ளான். காஷ்மீர் மாநிலத்தில் தெற்கு பகுதியில் ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த பாகிஸ்தான் பயங்கரவாதி ஒருவன் ட்ரால் ஈத்கா பகுதியில் கண்ணிவெடியில் சிக்கி விபத்துக்குள்ளாகி உயிரிந்தார். இதனை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியா; கிரிக்கெட் வீரர் ஆனா ரஹானேவின் தந்தை மதுகர் பாபுராவ் ரஹானே 54வயதான . இவர் தன் குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்தார்.அப்பொழுது எதிர்பாரத விதமாக மஹாராஷ்டிர மாநிலத்தில் இவரது கார் மோதியதில் ஆஷாதய் காம்ப்ளி 67 என்ற பெண் உயிரிழந்தார். இதனால் மதுகர் பாபுராவ் ரஹானே கைது செய்யப்பட்டுள்ளார். இது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா: 25 வயதான வினுவின் மரணம் அனைவரயும் அதிர வைத்துள்ளது. இவர் பயணம் செய்வதில் மிகுந்த பிரியம் கொண்ட, வினு லிம்கா சாதனையாளர். காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை 3,888 கிலோ மீட்டர் தூரத்தை காரில், 57 மணி நேரம் 20 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்தவர். 13 மாநிலங்களைக் கடந்து இரண்டரை நாள்களில் லிம்கா சாதனைக்குச் சொந்தக்காரராகியிருந்த வினு, இளம் வயதிலேயே மரணம் அடைவார் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். டிசம்பர் 5-ம் தேதியன்று செங்கானுரில் டூவீலரில் வந்துகொண்டிருந்த, வினு […]
எர்ணாகுளம் அரசு சட்டக் கல்லூரியில் படித்து வந்த 29 வயதான சட்ட மாணவி ஜீஷா கடந்த ஏப்ரல் 28, 2016 ல் எர்ணாகுளத்தில் பெருமாவூரில் உள்ள ஒரு கால்வாய்க்கு அருகே அவரது வீட்டில் சில நயவஞ்சகர்களால் கற்பழித்து கொல்லப்பட்டார். இது கேரள மக்கள் மத்தியில் பயங்கரமான ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் கேரள அரசியலையே ஒரு பயங்கர புயல் போல் சுழற்றி போட்டது. இந்நிலையில் ஜிஷாவுக்கு நீதி கிடைக்க இடைவிடாது போராடிய இடது ஜனநாயக முன்னணி அரசு .ஜிஷாவின் […]
குஜராத் தேர்தலில் ஒப்புகைச்சீட்டுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் மனு
4 பேர் கைது ராஜஸ்தானில் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் கைது தேஜாராம், அவரது மனைவி பித்யா, மகள்கள் சுகுனா, ராஜல் ஆகியோர் ராஜஸ்தானில் கைது
அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க மக்களை கட்டாயப்படுத்தக்கூடாது மக்களின் விருப்பத்தின் பேரிலேயே ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்
செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31 வரை கால அவகாசம் அளிக்க வேண்டும் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இடைக்கால உத்தரவு. அரசின் நலத்திட்டங்களுக்கும் ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31 வரை கால அவகாசம் அளிக்க வேண்டும் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவு
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை இன்று மாலை நடக்கிறது டெல்லியில் மாலை 4 மணிக்கு நடக்கும் கூட்டத்தில் ஹிமாச்சல், குஜராத் தேர்தல் குறித்து ஆலோசனை.
டெல்லி : மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற உள்ளது. கூட்டத்தில் முத்தலாக் தொடர்பான மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்படும் என தகவல்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முக்கிய அறிவிப்பு திருமலைக்கு இரு சக்கர வாகனங்களில் வரும் பக்தர்கள் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வரும் பக்தர்கள் சீட்பெல்ட் உபயோகிக்க வேண்டும் வாகனங்களில் வரும் பக்தர்கள் வாகன உரிமம் கட்டாயப்படுத்தப் பட்டுள்ளது இந்த முறை உடனடியாக அமுலுக்கு வரும்என்று தேவஸ்தானத்தின் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது.
450 சீட்களுக்கு மட்டுமே கேந்திரிய வித்யாலயாவில் மத்திய மனிதவளத்துறை அமைச்சருக்கு சிபாரிசு செய்ய அனுமதி. ஆனால் ஸ்மிருதி இரானி 2015-16ல் 5,128 பேருக்கு சிபாரிசு செய்ய 3500க்கு கிடைத்தது.2016-17ல் 15065 பேருக்கு சிபாரிசு செய்ய 8000த்திற்கும் அதிகமானோருக்கு கிடைத்தது. இதுவரை 2017-18 ஜாவ்தேகர் 15492 பேருக்கு சிபாரிசு செய்துள்ளார். 8000 பேருக்கும் மேல் கிடைத்திருக்கும் என தகவல் தெரிவிக்கிறது. has of in KVs. and
குஜராத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் 9ஆம் நடைபெற்றது. அதில் சுமார் 68சதவீத வாக்கு பதிவு நடைபெற்றது. இன்று இரண்டாம் கட்ட வாக்குபதிவு பகல் 12 மணிவரை சுமார் 39 சதவீத வாக்கு பதிவானது. இன்று பிரதமர் நரேந்திர மோடி அவரது சொந்த தொகுதியில் வரிசையில் நின்று வாக்களித்தார். அப்போது சுற்றி இருந்தவர்கள் மோடி மோடி என கூச்சலிட்டனர். பிறகு வாக்களித்துவிட்டு அவர்களிடம் பேசிவிட்டு மோடி சென்றார். வாக்களித்துவிட்டு, பிரதமர் மோடி வீதி […]