நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை தியாகராயர் நகரில் உள்ள சசிகலாவை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த தினம் இன்று சென்னை தியாகராயர் நகரில் உள்ள இல்லத்திலேயே இருந்து ஜெயலலிதா படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார் சசிகலா.சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்த பிறகு இன்று தான் சசிகலா ஜெயலலிதா பிறந்த நாள் நிகழ்வில் பங்கேற்றுள்ளார். இதனிடையே இன்று சென்னை தியாகராயர் நகரில் உள்ள சசிகலா இல்லத்தில் சமத்துவ மக்கள் […]
அதிமுகவில் அமமுக இணையும் என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் சொல்லியதில் உண்மையில்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அமமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக சென்னையில் செய்தியாளர்களிடம் அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், அதிமுகவில் அமமுக இணையும் என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் சொல்லியதில் உண்மையில்லை என்றும் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஒன்றாக இணைய வேண்டும் என்ற கருதத்தை சசிகலா கூறியிருக்கிறார் எனவும் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய […]
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக கொடியை பயன்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ள சசிகலா. இன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்த தினத்தை சென்னை தி நகரில் உள்ள இல்லத்திலேயே இருந்து சசிகலா ஜெயலலிதா படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். இதன்பின் பேசிய அவர், ஜெயலலிதாவின் உண்மையான உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து செயல்பட்டு தேர்தலில் வெற்றிப்பெற வேண்டும் என்று தெரிவித்திருந்தார். மேலும் 100 ஆண்டுகளுக்கு நம்முடைய ஆட்சி இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் […]
பெண் IPS அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தமிழக காவல்துறை சிறப்பு DGP ராஜேஸ்தாஸை முதல்வர் பழனிசாமி காப்பாற்றி வருவதற்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாருக்கு உள்ளாகியிருக்கும் தமிழகக் காவல்துறை சிறப்பு டி.ஜி.பி. திரு. ராஜேஸ்தாஸை, முதலமைச்சர் திரு. பழனிசாமி காப்பாற்றி வருவதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாலியல் குற்றத்திற்கு உள்ளாகும் ஒரு சில […]
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை. இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது முதல் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 49 ஆயிரத்தை கடந்துள்ளது. தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 32 […]
வடக்கு கேரளா மற்றும் அதை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. வடக்கு கேரளா மற்றும் அதை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோவை, நீலகிரி, சேலம், திண்டுக்கல், கன்னியாகுமரி, உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு எனவும், தென்தமிழகம்,டெல்டா, மாவட்டங்கள் காரைக்கால், பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் மேற்குத் […]
உடன்பிறப்புகள் ஒன்றாக இணைவோம் என்று சசிகலா கூறியது பற்றி அமைச்சர் ஜெயக்குமார் கருத்து. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் தினமான இன்று சென்னை தியாகராயர் நகரில் உள்ள இல்லத்தில் இருந்த ஜெயலலிதா படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார் சசிகலா. இதன்பின் பேசிய சசிகலா, 100 ஆண்டுகளுக்கு நம்முடைய ஆட்சி இருக்க வேண்டும். ஜெயலலிதாவின் உண்மையான உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து செயல்பட்டு தேர்தலில் வெற்றிப்பெற வேண்டும். அதற்கு நான் துணையாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் நான் […]
தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.தற்போதைய தமிழக சட்டப்பேரவையின் காலம் வருகின்ற மே 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கூடுதலாக 25000 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.மேலும் கொரோனா காரணமாக தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்தலுக்கு தயாராகும் […]
அதிமுகவில் விருப்பமனு விநியோகம் இன்று முதல் தொடங்கியது. தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.அதிமுகவில் விருப்பமனு விநியோகம் இன்று முதல் தொடங்கியது.தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர், இன்று முதல் மார்ச் 5-ம் தேதி வரை விருப்பமனு பெற்று பூர்த்தி செய்யலாம் என்றும், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்பமனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்ப மனுவுக்கு தமிழ்நாட்டில், ரூ.15,000, புதுச்சேரியில் […]
சென்னை தி நகர் இல்லத்தில் சசிகலாவுடன் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், ராதிகா சந்தித்துள்ளனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த தினம் இன்று சென்னை தியாகராயர் நகரில் உள்ள இல்லத்திலேயே இருந்து ஜெயலலிதா படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார் சசிகலா. இதையடுத்து, சென்னை தி நகர் இல்லத்தில் சசிகலாவுடன் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், ராதிகா சந்தித்துள்ளனர். அதிமுக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி இருந்து வந்த நிலையில், சசிகலாவிடம் சரத்குமார் சந்தித்துள்ளார். […]
சட்டமன்ற தேர்தலையொட்டி ஒரே நாளில் 132 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக சேது வருகிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படும் நிலையில், எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க காவல்துறை முன்னேற்பாடுகளை கையாண்டு வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் ஒரே நாளில் 132 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளன. கடலூரில் 46, திருவள்ளூரில் […]
திண்டுக்கல்லில் புதுமண தம்பதிக்கு வித்தியாசமான கல்யாண பரிசாக பெட்ரோல் மற்றும் சின்ன வெங்காயத்தை நண்பர்கள் வழங்கினார்கள். அண்மை காலமாக பெட்ரோல் ,டீசல் விலை உயர்ந்து வருகிறது.இதனால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.அதே வேளையில் மறுப்புறம் வெளி மாநிலங்களில் விளைச்சல் பாதிப்பு காரணமாக சின்ன வெங்காயத்தின் விலையும் உயர்ந்துள்ளது.இது மேலும் பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் கோவிந்தராஜ் மற்றும் வினோதினி ஆகியோரின் திருமணம் நடைபெற்றது.திருமண விழாவிற்கு வந்த உறவினர்களும் நண்பர்களும் மணமக்களுக்கு […]
சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மெழுகு சிலையுடன் அமைந்துள்ள அருங்காட்சியகம், அறிவுசார் பூங்கா திறப்பு. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் அருகே அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம், அறிவுசார் பூங்காவை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். அருங்காட்சியகத்தில் ஜெயலலிதா புகைப்பட தொகுப்பு, விருதுகள் பயன்படுத்திய பொருட்கள் இடம்பெற்றுள்ளன. இந்த திறப்பு விழாவில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
நாமக்கல் மண்டலத்தில் இன்று ஒரு முட்டையின் பண்ணைகொள்முதல் விலை கடந்த 20 ஆம் தேதியிலிருந்து மாற்றமின்றி 4.30 காசுகளாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் தான். கிட்டத்தட்ட 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து விற்பனை செய்யப்பட்டது. அதற்கு பிறகு முட்டை விலை ஏற்றம் மற்றும் இறக்கத்தை கண்டு வருகிறது. இந்த நிலையில், தேசிய முட்டை ஒருங்கிணைப்ப உறுப்பினர்கள் […]
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தங்களின் வேலைநிறுத்த முடிவை கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல். ஓய்வூதியப் பலன், ஊதிய உயர்வு, தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர பணி, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25-ஆம் தேதி (நாளை) முதல் போக்குவரத்துக்கு கழக ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்திருந்தனர். இது தொடர்பாக கடந்த மாதம் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சில அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. ஆனால், அந்த பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடு எட்டவில்லை. இந்நிலையில், […]
விரைவில் நான் தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்திப்பேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் 73-வது பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.இதனால் சென்னை தியாகராயர் நகரில் உள்ள இல்லத்திலேயே இருந்து ஜெயலலிதா படத்திற்கு மரியாதை செலுத்தினார் சசிகலா. மரியாதையை செலுத்திய பின் சசிகலா பேசுகையில், 100 ஆண்டுகளுக்கு நம்முடைய ஆட்சி இருக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறிச்சென்றதே நம்முடைய இலக்கு. நிச்சயமாக நீங்கள் செய்வீர்கள், நானும் துணையிருப்பேன்.விரைவில் நான் தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்திப்பேன்.ஜெயலலிதாவின் உண்மையான உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து […]
எடப்பாடி தொகுதிக்கு முதல்வரும், போடிநாயக்கனூர் தொகுதிக்கு துணை முதல்வரும் இன்றே விருப்ப மனு அளிக்க உள்ளனர். தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.அதிமுகவில் விருப்பமனு விநியோகம் இன்று முதல் தொடங்குகிறது.தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர், இன்று முதல் மார்ச் 5-ம் தேதி வரை விருப்பமனு பெற்று பூர்த்தி செய்யலாம் என்றும், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்பமனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் […]
சென்னை ராயப்பேட்டையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா சிலைக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் 73-வது பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது அதிமுக பிரபலங்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள், செல்வி ஜெயலலிதாவின் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய நிலையில், சென்னை ராயப்பேட்டையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா சிலைக்கு […]
தனது இல்லத்தில், ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய முதல்வர். மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் 73-வது பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதிமுக பிரபலங்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள், செல்வி ஜெயலலிதாவின் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது இல்லத்தில், ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.
முதல்வரின் வீட்டின் அருகே, இரண்டு வாகனங்கள் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் வீடு, சென்னை பசுமை வழிச்சாலை அருகே அமைந்துள்ளது. இந்நிலையில், முதல்வரின் வீட்டின் அருகே, இரண்டு வாகனங்கள் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்திற்கு காரணமானவர்கள் குடி போதையில் வாகனத்தை ஒட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, போதையில் வாகனத்தை ஒட்டிய ஜோ என்ற வெளிநாட்டை சேர்ந்த நபரை […]