ஜில் நியூஸ்: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்..!

Chance of rain in 7 districts due to atmospheric circulation prevailing in North Kerala and adjoining coastal areas.

வடக்கு கேரளா மற்றும் அதை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

வடக்கு கேரளா மற்றும் அதை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோவை, நீலகிரி, சேலம், திண்டுக்கல், கன்னியாகுமரி, உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு எனவும், தென்தமிழகம்,டெல்டா, மாவட்டங்கள் காரைக்கால், பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைபோல் வருகின்ற 26ம் தேதி வரை தமிழகம் , புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும் எனவும் கூறப்படுகிறது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.