தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இடைகால நிதி நிலை அறிக்கை தொடர்பான விவாதம் இன்று நடக்க உள்ளது. கடந்த 23-ஆம் தேதி சென்னை வாலாஜாசாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில், துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தனது 14-வது நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த நிதி நிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, பிப்.25 இன்று முதல் வரும் 27-ம் தேதி வரை […]
திமுக, காங்கிரஸ் இடையே அதிகாரப்பூர்வமாக தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கியது. திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கேரளா முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன்சாண்டி நேற்று வருகை தந்தார். நேற்று காங்கிரஸ் மேலிடப்பொறுப்பாளர்கள் ஆலோசனை நடத்தினர். 4 மணி நேரத்திற்கு மேலாக நடந்த ஆலோசனையில் எந்த தொகுதி , எத்தனை தொகுதி என்பது குறித்து விவாதம் செய்யப்பட்டது. காங்கிரஸ் சார்பில் 30 தொகுதிகள் கேட்க திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால் திமுக சார்பில் 20 முதல் 25 […]
பிரதமர் மோடி தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்கிறார் பிரதமர். புதுச்சேரி செல்லும் பிரதமர் மோடி காரைக்கால் மாவட்டத்தை உள்ளடக்கிய விழுப்புரம் – நாகப்பட்டினம் வரையிலான 56 கி.மீ தூரம் 4 வழி தேசிய நெடுஞ்சாலை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.காரைக்கால் மாவட்டத்தில் ஜிப்மர் மருத்துவ கல்லூரி கட்டிடத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். இத்திட்டத்தின் மதிப்பீட்டு செலவு ரூ.491 கோடி.சாகர்மாலா திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் சிறு […]
கொரோனா பரவல் காரணமாக தமிழகம் வருவோர்கள் 7 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் அறிவிப்பில், கேரளா, மகாராஷ்டிராவில் ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோர்கள் தங்களை கட்டாயம் 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவித்துள்ளது. வெளி மாநிலங்களிலிருந்து தமிழகம் வருவோர் கொரோனா அறிகுறி தென்பட்டால் பரிசோதனை செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. சோதனையில் பாசிட்டிவ் என வந்தால் மருத்துவமனை, கோவிட் கேட் மையங்களில் தங்க வைக்கப்படுவர். வெளிநாடுகளிலிருந்து […]
பேருந்து ஸ்டிரைக் கருத்தில் கொண்டு இன்று காலை 7 மணி முதல் 11 மணி மற்றும் மாலை 4 மணி முதல் 8 மணி வரை 5 நிமிடத்திற்கு ஒரு முறை இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. போக்குவரத்து சங்கத்தினர், ஓய்வூதியப் பலன், ஊதிய உயர்வு, தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர பணி, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தது. இன்று பணிக்கு […]
நாமக்கல் மண்டலத்தில் இன்று ஒரு முட்டையின் பண்ணைகொள்முதல் விலை கடந்த 20 ஆம் தேதியிலிருந்து மாற்றமின்றி 4.30 காசுகளாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் தான். கிட்டத்தட்ட 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து விற்பனை செய்யப்பட்டது. அதற்கு பிறகு முட்டை விலை ஏற்றம் மற்றும் இறக்கத்தை கண்டு வருகிறது. இந்த நிலையில், தேசிய முட்டை ஒருங்கிணைப்ப உறுப்பினர்கள் […]
கிரிக்கெட் மைதானத்துக்கு பிரதமர் மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது குறித்து எம்.பி.ஜோதிமணி ட்வீட். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், மொடேராவில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார். இந்த அரங்கத்தில் 1.10 லட்சம் ரசிகர்கள் கிரிக்கெட் போட்டிகளை கண்டு ரசிக்கலாம். 2018-ஆம் ஆண்டு குஜராத் கிரிக்கெட் சங்கத்தால், புதிய அரங்கத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. உலகின் மிகப் பெரிய படேல் கிரிக்கெட் மைதானத்துக்கு பிரதமர் மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து எம்.பி.ஜோதிமணி தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘நரேந்திர […]
திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து 3-வது முறையாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனுவை இன்று அளிக்க உள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதனையடுத்து, அணைத்து காட்சிகளிலும் விருப்பமனு விநியோகம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திமுக சார்பில், 2021-தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத்தேர்தலில்,திமுக வேட்பாளராகப் போட்டியிட விரும்புவோர் 17-02-2021 முதல் 24-02-2021 வரை தலைமைக் கழகத்தில் விண்ணப்பம் செய்யலாம் என பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், 24-ம் […]
இன்று சிலிண்டரின் விலை மேலும் ரூ.25 அதிகரித்துள்ளது. இதனால் சிலிண்டரின் விலை தற்போது ரூ.810 ஆக விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி சிலிண்டரின் விலை ரூ.710 ஆக இருந்தது. இந்நிலையில், இந்த மாதம் (பிப்ரவரி ) 4-ம் தேதி ரூ.25 ரூபாய் அதிகரித்து ரூ.735 ஆக விற்பனை […]
தமிழகத்தில், குறைவான நபர்கள் மட்டுமே மருத்துவமனையில் உள்ளது ஆறுதல் அளித்தாலும், அண்டை மாநிலங்களில் பரவும் புதிய வகை கொரோனாவால், சற்று அச்சம் ஏற்படுகிறது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. தற்போது தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும், புதிதாக பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் பல இடங்களில் மக்களை அச்சுறுத்தி வருகிறது. அந்த வகையில், இந்தியாவில், கேரளா, பஞ்சாப், மஹாராஷ்டிரா, சட்டிஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம் சட்டிஸ்கர் மாநிலங்களில் உருமாறிய கொரோனா வைரஸால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். […]
தமிழகம் முழுவதும் இந்த வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியுள்ள நிலையில், அரசு போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசை போக்குவரத்து சங்கத்தினர், ஓய்வூதியப் பலன், ஊதிய உயர்வு, தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர பணி, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரிதொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்று பணிக்கு வராத போக்குவரத்து ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்து இருந்த நிலையில், அரசின் எச்சரிக்கையை மீறி, தமிழகம் முழுவதும் […]
மதுரையில், பெருமாள் தெப்பக்குளத்தை சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட எலக்ட்ரானிக் கடைகள் உள்ளன. இங்கு நேற்று இரவு 11 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மதுரையில், பெருமாள் தெப்பக்குளத்தை சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட எலக்ட்ரானிக் கடைகள் உள்ளன. இங்கு நேற்று இரவு 11 மணியளவில், ஒரு எலக்ட்ரானிக் கடையில் ஏற்பட்ட மின்கசிவால், தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ அடுத்தடுத்த கடைகளுக்கு பரவ தொடங்கியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், பல மணிநேரம் போராடி […]
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வருகை தருகிறார். தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சற்று பரபரப்பாக தான் காணப்படுகிறது. தேர்தல் பணிகள் மற்றும் அதற்கான முன்னேற்பாடுகளை அனைத்து அரசியல் கட்சிகளும் மேற்கொண்டு வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளுமே தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று தமிழகம் மற்றும் […]
துணை முதல்வர் ஓபிஎஸ் கலந்து கொண்ட, வஉசி சிலை திறப்பு விழாவில் சலசலப்பு. தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில், வஉசி சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ் கலந்து கொண்டார். அப்போது அங்கு கூடியிருந்த ஒரு பிரிவினர், ஓபிஎஸ்-க்கு எதிராக முழக்கமிட்டனர். அதாவது, ஒரு சமூகத்திற்கு அதாவது, 6 பிரிவுகளை உட்படுத்தி, தேவேந்திர குல வேளாளர் என்ற ஒரே பெயரில் அந்த சமூகத்தினருக்கு அங்கீகாரம் கொடுக்க தமிழக அரசு பரிந்துரை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, […]
மார்ச் மாதம் முதல் வாரத்தில் தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடத்தி முடிக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு கடிதம். தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால், அதற்கான முன்னேற்பாடு பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. அதுவம் ஓரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்றும் தமிழக அரசியல் காட்சிகள் கோரிக்கை வைத்த நிலையில், அதற்கான ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை […]
முதல்வர் பழனிசாமி, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில், ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு முன் குடும்பத்துடன் தீபம் ஏற்றி உறுதிமொழி எடுத்துக் கொண்டார். கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் சேர்ந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அந்த அறிக்கையில், மக்களை கண்போல் காத்த கடவுள் அம்மாவின் பிறந்தநாள் அன்று நீங்கள் ஒவ்வொருவரும் ‘என் இல்லம் […]
பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளிவரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பாலியல் தொல்லை தந்தாக சிறப்பு டிஜிபி ரமேஷ் தாஸ் என்பவர் மீது பெண் ஐபிஎஸ் அதிகாரி புகார் அளித்திருந்தார்.பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் புகார் தொடர்பாக அளித்த புகாரை விசாரிக்க கூடுதல் தலைமை செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் […]
வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று போக்குவரத்துக்கு தொழிற்சங்கத்தினர் திட்டவட்டம். நாளை அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தில் போக்குவரத்துக்கு ஊழியர்கள் பங்கேற்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழகத்துக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து சென்னை பல்லவன் இல்லத்தில் அரசு போக்குவரத்து கழக சங்க தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆலோசனை மேற்கொண்டனர். நாளை முதல் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்த நிலையில், தொழிற்சங்கத்தினர் ஆலோசனை நடத்தினர். இதன்பின் பேசிய போக்குவரத்து தொழிலாளர் தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் […]
ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார். தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.அதிமுகவில் விருப்பமனு விநியோகம் இன்று முதல் தொடங்கியது.தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர், இன்று முதல் மார்ச் 5-ஆம் தேதி வரை விருப்பமனு பெற்று பூர்த்தி செய்யலாம் என்றும், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்பமனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்ப […]
நாளை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரம்பற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் தமிழக அரசு எச்சரிக்கை. நாளை அறிவித்துள்ள வேலைநிறுத்தத்தில் போக்குவரத்துக்கு ஊழியர்கள் பங்கேற்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழகத்துக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் தொழிலாளர்கள் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. பணிஓய்வு, வாரஓய்வு, மாற்றுப்பணி ஓய்வுக்கு அனுமதி பெற்றவர்களுக்கு அனுமதி ரத்து என்றும் அறிவித்துள்ளது. போக்குவரத்துக்கு தொழிலாளர்கள் நாளை பணிக்கு வர வேண்டும் என்றும் மாற்று […]