மாற்றமின்றி விற்பனையாகும் முட்டை விலை..!

The farm purchase price of an egg in Namakkal region today has been selling unchanged at 4.30 rupees since the 20th.

நாமக்கல் மண்டலத்தில் இன்று ஒரு முட்டையின் பண்ணைகொள்முதல் விலை கடந்த 20 ஆம் தேதியிலிருந்து மாற்றமின்றி 4.30 காசுகளாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் தான். கிட்டத்தட்ட 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து விற்பனை செய்யப்பட்டது. அதற்கு பிறகு முட்டை விலை ஏற்றம் மற்றும் இறக்கத்தை கண்டு வருகிறது.

இந்த நிலையில், தேசிய முட்டை ஒருங்கிணைப்ப உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் முட்டையின் விலையை குறைக்க முடிவு செய்தனர். அதன்படி நாமக்கல் மண்டலத்தில் இன்று ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை கடந்த 20 ஆம் தேதியிலிருந்து மாற்றமின்றி 4.30 காசுகளாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.